காதல்
நானும் நேசித்தேன்
என் காதலியை
பழகிய
சிறுகாலங்களிலே
என் இரவை
பறிகொடுத்தேன்
என்னை அடிக்கடி
எழுப்பும்
தென்றல்
காற்றும் அவள்தான்
என் காதலி
என்னிடம் பகலில் பேசியதில்லை
பேசவும் முடியவில்லை
இரவில் என்னிடம்
பேசியது தான் அதிகம்
நான் தூக்கத்தை மறந்து
நான் அவளிடம்
கூறியதை விட
எனக்கு அவள்
கூறியதே அதிகம்
அதை என் வார்த்தையினால்
சொல்ல முடியவில்லை
அவள் எழுத்தினால்
சொல்ல முடிந்ததை
என்னையும் அறியாமலே
அவளை நேசிக்க ஆரம்பித்தேன்
அவளும் என்னை நேசித்தால்
அவள் யாரென்று கூற ஆசைப்படுகிறேன்
புத்தகம் தான்
என் காதலி