இத்தனை இம்சைகள் ஏனடி

இதழ் விரிக்கும் மலரே
உனக்காக
ஆற்றங்கரையிலே நான் காத்திருந்த வேளையில் பூத்தாடை உடுத்தி
வந்த புள்ளி மானாக துள்ளி வந்து என் நெஞ்சை துவம்சம் செய்துவிட்டாய்!

பனைமட்டையில் பதனீர் அருந்தும் வேளையில், புருவத்தால்
என் நெஞ்சை கீறி என் உயிரையும் சேர்த்து குடித்துவிட்டாள்!

மழைத்துளியின் தூறல்களை உன் நெற்றிசுட்டியாய் அலங்கரித்து
என் இதயத்தில் அழகாய் கோலம் இடுகிறாய்!

சாலையோர உணவத்தில் சாயங்கால வேளையில் உணவருந்தும் போது
என் மனசை உன் காதல் பசிக்கு உணவாக தொட்டுக்கொள்கிறாய்!

உன் வீட்டு பட்டியில் உள்ள ஆட்டுக்குட்டி போல
என் ஞாபகங்களை உன் நெஞ்சுக்குள்ள பூட்டிக்கொள்கிறாய்!

பழுது பட்ட வாகனம் போல இருந்த நெஞ்சை உன் பார்வை
தீப்பொறி கொண்டு என் இதய இயந்திரத்தை இயக்குகிறாய்!

என் இதய பூமியில் உன் பூன்னகையால் உரம் தூவி
காதல் பயிரை அறுவடை செய்கிறாய்!

எழுதியவர் : சுதாவி (24-May-18, 8:09 pm)
பார்வை : 54

மேலே