உனக்காக என் கீதம்

உங் கொல்லி கண்ணு பார்வ
போசுக்குதடி ஆள......
சில்லு வண்டு பேச்சு
ஏங் காதுக்குள்ள கூசும்......

சிட்டெறும்ப போல
நீ கடிச்சாயே என்ன
அடி....சக்கரைய போல
நானும் இனிச்சேனா
பொண்ணே.......!

உன் விரலில்
மட்டும் மோதிரமாய்
எந்தன் மனதை
உருக்கி செய்திடவா.......

உன் நெற்றி ஒட்டும்
வண்ணப் பொட்டாய்
எந்தன் உதிரம்
குழைத்து
வைத்திடவா......

உன் உடலை
மறைக்க
பொன் உடலை
மறைக்க
எந்தன் உயிரை
தறித்து சேலை
ஒன்று நெய்திடவா......
அன்பே நீ உடுத்திடவா
என்னை நீ எடுத்திட வா
உன்னில் எனை புதைத்திட வா....

காணாத காணகத்தில்
உன்ன நானும் கண்டெடுத்த
எங் காதலியே!
கண்மணியே!!
உன்ன விட்டு போக மாட்டடி......

யாராரோ வந்து போகும்
உலகத்துல
நீ மட்டும் தானடி
என்னோடு வந்த புள்ள
என் செல்லக்குட்டி!
பட்டுக்குட்டி!!
உன்ன தாண்டி
போக மாட்டேன்டி........

செவ்வானம் செவக்கையில
உங் கைய புடிச்சி நடக்கனும் டி....
இந்த பூமி அழிந்து
போகும் மட்டும்
நா உங்கூட வாழனும் டி........
காலம் கடந்து போனால்
அடி நாளும் மறந்து
போகுமடி.........
ஆனால் நம் காதல்
மட்டும் கடிகார முள்ளாய்
சுத்துமடி........!!!!
உனக்காக என் கீதம்
சமர்ப்பணம் .....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-May-18, 10:05 pm)
Tanglish : unakaaga en keetham
பார்வை : 54

மேலே