காதல்

மலர்விழியே , உன் பார்வை
எப்போது என் மீது என்று
கொக்காய்க் காத்திருக்க
மெல்ல திறந்தது உந்தன்
மை இட்ட இமைகளிரண்டும்
மருண்ட மான் விழிப்பார்வை
விழுந்தது என் மேல் ..........
உந்தன் செவ்வாய்த் திறவாதோ
முத்துச்சரங்கள் சிரிப்பாய் மலர
என்று நினைக்கையில் ........
மலர்ந்திடும் மூங்கில்பூப்போல்
திறந்தது உன் மலர்வாய்
நீ சிரித்தாய் முல்லைச்சிரிப்பு
கொடி இடையால் நீ நடந்திடுவாயா
என்று அன்னமும், நானும் காத்திருக்க,
மின்னல் கொடிபோல் நொடியில்
உந்தன் நடை தந்து மறைந்துவிட்டாய்,
உந்தன் நடையோடு இசைத்தந்த
சலங்கை ஒலி என் மனதை நீ
மறைந்தாலும் உன் பிம்பமாய்
என் மனதில் அலைகின்றதே ....
மீண்டும் உன்னைக் காண்பேன் நான்
எப்போது , என்னவளே ....என்னவளே ..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jun-18, 5:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 127

மேலே