புதையல் 13

மூவரும் அந்த இரு பெட்டிகளை வைத்து கொண்டு சாவியை தேடி அலைந்தனர்.தீ பந்தின் உதவி கொண்டு சாவியை தேடினர். சிறிய பெட்டியை திறந்தால் போதும் பெரிய பெட்டியின் சாவி அதில் இருக்கும்.
அங்கு இருந்த ஓவியம் மற்றும் சிலைகளில் தேடினர்.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.பாதாள குகையிலும் சாவி இல்லை.என்ன
செய்ய என் மூவரும் யோசித்து கொண்டே இருக்க அண்ணா இந்த பணிப்பெண்ணின் சிலை உயிர் பித்து வந்தது.அது தம்மிடம் ஏன் கேள்வி கேட்டது.உண்மையாகவே
இந்த சிலைக்கு உயிர் இருக்குமோ என்று கடைசி தம்பி கேட்க சிரித்து கொண்டே சில அதிசயத்தில் அதுவும் ஒன்றாக இருக்கும் என்றார் மூத்த சகோதரர்.பின் ஆம் நான் அந்த பணிப்பெண் கனவில் வந்த போது
அதன் கழுத்தில் சாவி போன்று இல்லை சங்கிலி இல்லை ஏதோ பார்த்தேன் என்றார் மூத்த சகோதரர்.
உடனே மூவரும் சிலையின் அருகே சென்று பார்த்தனர்.ஆம் அது சங்கிலி ,சங்கிலியை எடுத்து பார்த்தனர் அதில் ஆறு ஏழு சாவிகள்
இருந்தன.வித விதமாய் வித்தியாசமான சாவிகள் அதை பெட்டியில் பொறுத்தி பெட்டியை
திறக்க முற்பட்டனர்.
மேலும் பெட்டியில் ஒரு சாவி பொருந்தியது.சிறிய பெட்டியை திறந்தனர்.அதில் பெரிய பெட்டியின் சாவி கிடைத்தது..
பெரிய பெட்டியையும் திறந்தனர்.
பெட்டியில் அவர்கள் தேடி வந்த கல்வெட்டு கிடைத்து விட்டது.
கல்வெட்டில் அந்த புதையல் படமும்
அவர்கள் நினைத்த புதையலுக்கான
வழியும் புதையல் புதைந்த இடமும்
கல்வெட்டாக அமைந்திருந்தது.

மேலும் அதில் போகும் குறுக்கு வழியும் இருந்தது.
மூவரும் புதையலை அடைய தன் தாத்தா சிங்காரத்தை பெருமை படுத்த புதையலை நோக்கி பயணித்தனர்.
அது எங்கு இருக்கும் புதையல்
என பயணிக்க பயணிக்க
ஆர்வம் மிகுந்து சென்று கொண்டிருந்தனர்...

புதையல் கண்டறிவார்களா?
புதையல் என்னவாக இருக்கும்?

எழுதியவர் : உமா மணி படைப்பு (1-Jun-18, 7:22 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 111

மேலே