முல்லைவனம்
முகவுரை
மூளை சலவை செய்வது அரசியல்வாதிகள் பலருக்கு கை தேர்ந்த கலை . ஒரு பொய்யினை ஆதாரம் இல்லமால் திருப்பித் திருப்பி சொல்வது மூளை சலவை செய்வதில் ஒரு முக்கிய அம்சம். மூளை சலவைக்காரன் பேசும் போது நீரும் தானும் நண்பர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த பல வழிகளில் முதுகில் தட்டி அல்லது மச்கான், சேர், ஐயா போன்ற வார்த்தைகள் பாவித்து. பேசுபவரை புகழந்து . தனக்கு உயர் இடத்தில் உள்ள அரசியல்வாதிகளை தெரியும் என்று குறிப்பிட்டு, பேப்பரில் தான் அவர்களோடு எடுத்த படங்களை காட்டி தம் மேல் நம்பிக்கை உருவாக்குவது மூளைசலவைக்காரன் கையாளும் யுக்தி நான் சொல்வததை நம்புங்கள் என்று பேசத் தொடங்குவார். கூசாமல் பொய் சொல்வார்கள் இவர்கள் ஆடம்பரமன் கவர்ச்சியான ஆடை அணிந்து, சிரித்த முகத்தோடு பேசுவார்கள். அது அவர் பேசுபவரை தன் பேச்சின் மூலம் கவரும் ஒரு யுக்தி இன்னும் பல யுக்திகள் கையாண்டு மக்களை நம்ப வைத்து அவர்களின் தேவை அறிந்து அவர்களின் மூளையை தமக்கு சார்பாக சலவை செய்து விடுவார்கள். இவர்கள் அனேகமாக சுயநலவாதிகள், இது சிந்திக்கத் தெரியாத படிப்பு அறிவு இல்லாதவர்கள்மேல் இலகுவில் பாவிக்கக் கூடிய கலை. அதோடு அவருக்கு உதவியாக கூஜா தூக்கிகள் அவர் பக்கத்தில் நின்று அவர் சொல்வதுக்கு எல்லாம் தலை ஆட்டியபடி நிற்பார்கள். . இந்த கதை ஒரு கிராம மக்களின் மூளை சலவை செய்ய முயற்சித்த கதை
***
முல்லைவனம் ஒரு பசுமையான விவசாயக் கிராமம் ஒரு காலத்தில் அடர்த்தியாக வளர்ந்த முல்லை செடிகளில் ஒன்றுக்கு பாரி வள்ளல் தேர் கொடுத்தது அக்கிராமத்தில் என்று தமது கிராமத்தோடு தொடர்புள்ள மரபுக் கதையை பெருமையாக மக்கள் சொல்வார்கள். முல்லைவனம் கிராமத்தின் இயற்கை அழகை மேருகூட்டும் விதத்தில் வற்றாத வளைந்து ஓடும் ஒரு நதி அதோடு இரு சிற்றாறுகள் . பறவைகள் புடை சூழந்த ஒரு குளம் . ஒரு மலை , குன்றத்தில் குமரனுக்கு ஒரு கோவிலும் அந்த கிராமத்தில் இருந்தது அவ்வூரில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன .உப தபால் கந்தோர் அவர்களுக்கு தபால் சேவை வழங்கியது. தினமும் காலையும், மதியமும். மாலையும் முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு நகரத்தில் இருந்து கிராமத்துக்கு பஸ் வந்து போகும்.. மாட்டு வண்டி, சைக்கில், மோட்டார் சைக்கில், நடை, அக்கிராம மக்களின் போக்குவரத்துக்கு உதவியது. கார்கள் ஒருவரிடமும் இல்லை மின்சாரம் இன்னும் கிராமத்துக்கு வரவில்லை. பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலக் கூடிய ஒரு பாடசாலை அக்கிரமத்தில் இருந்தது .வைத்தியத்துக்கு ஒரு டிஸ்பென்சரி. அதுக்கு துணையாக நாட்டு வைத்தியர் முத்துவேலு. பிரதான வீதியில் சில கடைகள். அவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயமும், நெசவும் . அந்த கிராமத்து அபிவிருத்திக்கு மக்கள் ஒழுக்கத்தையும் ஒற்றுமையை பேணவும், கிராமத்தில் ஒரு அனுபவம் உள்ள கிராமத் தலைவரின் கீழ் சில முதியோர்களை கொண்ட கிராம சபை உண்டு.
அவ்வூர் மக்கள் அப்பாவிகள். சூது வாது தெரியாதவர்கள். கிராம சபையின் சொற்படி செயல் படுவார்கள் . மூன்று வருடத்துக்கு ஒரு தடவை கிராம சபை தலைவரை ஏகமனதாக தேர்ந்தேடுப்பார்கள். அவர்கள் வெளியில் இருந்து வந்த ஒருவர் எதை சொன்னாலும் இலகுவில் நம்பி விடுவார்கள்;. அந்த கிராமத்தில் படித்தவர்கள் மிகக் குறைவு. பல முதியோர்கள் உள்ள கிராமம்.
****
அன்று கிராமச் சபை கூடும் நாள். காலை சங்கத்துக்கு ஒரு வானில் நால்வர் வந்து இறங்கினார்கள் . அதில் ஆடம்பரமாக கோட்டும் சூட்டும் போட்ட ஒருவர் இருந்தார். அவர் வந்த கூட்டதின் தலவர் என்பதை கிராம சபை அங்கத்தினர்கள் அறியக் கூடியதாக இருந்தது.
“ வணக்கம் எல்லோருக்கும். உங்கள் கிராம சபை தலைவர் நடராஜா என்பவரோடு நான் பேச முடியுமா”? கோட்டும் சூட்டோடு வந்தவர் கேட்டார்
“ நான் தான் நீங்கள் கேட்கும் நடராஜா என்பவர் . நீங்கள் யார் என்று சொல்ல முடியுமா “? கிராம சபை தலைவர் சொன்னார்
“ என் பெயர் ஆனந்தன் . நான் உங்கள் கிராமத்தை பற்றி நன்கு அறிந்தவன். நீங்கள் ஒரு இளபாறிய பொறியியலாளர் என்றும் பிற தேசங்களில் வேலை செய்தவர் என்றும் உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருகிறேன். இந்த கிராமத்துக்கு உங்கள் சேவை அளப்பரியது என்று என் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் கிராமத்தை மேலும் அபிவிருத்தி செய்வதை பற்றி பேச நாங்கள் வந்திருக்கிறோம். என்னோடு வந்த மூவரில் இருவர் தொழில் அதிபர்கள் மற்றவர் கனிவள துறையில் வேலை செய்பவர் . உங்கள் கிராம அபிவிருத்கிக்கு தேவையான நிதி முதலீடு செய்ய இவர்கள் தயார்”. என்று நடராஜாவின் முதுகை தடவி கைகுலுக்க தன் வலது கைகளை நீட்டினர்.
நடராஜா மரியாதையாக நடப்பவர்களை மதித்து நடப்பவர். ஆனால் எவரையும் உடனே இலகுவில் நம்பி விட மாடார்.. ஆனந்தன் நீட்டிய கையை பிடித்துக் குளுக்காமல். வணக்கம் என்று தமிழ் காலாச்சார முறைப்படி தன் இரு கைகளை கூப்பி வணக்கம் கூறி வரவேற்று வந்தவர்களுக்கு அமர்வதற்கு ஆசனங்கள் கொடுத்தார்
“உங்கள் கிராமம் கனி வளம் உள்ள கிராமம் என அறிந்தோம். இந்த கனிவளத்தை பாவித்து உங்கள் வயல்களின் விளைச்சல் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கலாம் . உங்கள் கிராமத்தின் வருமானம் அதிகரிக்கும். அதோடு அந்த கனிவளத்தில் இருந்து இரசாயன பொருட்களை உருவாக்கும் ஒரு தொழில்சாலை ஒன்றை அமைத்து பிற பகுதிகளில் விற்று அதில் வரும் ஆதாயத்தில் வரும் பணத்தில் ஒரு பங்கு உங்கள் கிராமத்தின் அபிவிருத்திக்கு கிடைகும். கிராமத்து இளைஞர்களுக்கு தொழில்சாலையில் வேலை கிடைக்கும் உங்கள் கிராமத்தில் உள்ள சிறு ஒழுங்கைகள் தார் போட்ட வீதிகளாக மாறலாம். ஓலை , குடிசைகள் கல் வீடுகளாக மாறலாம் உங்கள் சிறிய பாடசாலை உயர் கல்லூரி தரத்துக்கு உயரலாம். வெகு தூரத்துக்கு சென்று உங்கள் கிராம சிறுவர்கள் கல்வி பயில தேவை இல்லை. அதோடு இப்போது இருக்கிற டிஸ்பென்சரி ஆஸ்பத்திரியாக உயரலாம் கிராமத்துகு மின்சாரம் வரும். அதனால் துலா பாவிக்காமல் மோட்டார் பம்ப் பாவித்து தோடங்களுக்கு நீர் பாச்சலாம். உழவு பிடித்து வியர்வை சிந்தி உழைக்கத் தேவை இல்லை. உழும் இயந்திரம் பாவித்து கஷ்டப் படாமல் வயல்களை உழலாம் இப்படி பல பயன்கள் உங்கள் கிராமத்துக்கு கிடைக்கும்” ஆனந்தன் சொன்னார்
. .
“ அது சரி என்ன என்ன கனி வளங்கள் எங்கள் கிராமத்தில் இருக்கிறது? விபரம் சொல்ல முடியுமா “? நடராஜா கேட்டார்.
“என்னோடு வந்துள்ள கனிவள இரசாயன நபுணர் மாணிக்கம் உங்கள் கிராமத்தில் உள்ள கனிவளம் பற்றியும் அதன் பயன் பற்றியும் உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்” ஆனந்தன் மாணிக்கத்தை சபை அங்கத்தினர்களுக்கு அறிமுகப் படுத்தினார் . அதோடு தொழில் அதிபர்கள் செல்வரத்தினத்தையும் . ராஜலிங்கத்தையும் அறிமுகப் படுத்தினார்.
மாணிக்கம் கனி வளம் பற்றி விளக்கத் தொடங்கினார் “வயல் செய்யும் விவசாயிகள் பலருக்கு வயலின் விளைச்சலோடு சம்பந்தமுள்ள இரசாயனம் பற்றி அதிகம் தெரியாது. அந்த இரசாயனக் கனிவளங்கள் உங்கள் கிராமத்திலேயே இருக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மையான பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மா“
“அவை எப்படி பயிர்களின் விளைச்சளை அதிகரிக்கும்”? : சங்கத்தில் உள்ள ஒரு முதியவர் கேட்டார்.
“நெற்பயிரின் முக்கிய ஊட்டச்சத்தான தழைச்சத்து பொதுவாக நெல் உற்பத்தித் திறனை வரையீடு செய்கின்றது. இலைகளுக்கு நன்கு ஆரோக்கியமான பச்சை நிறத்தை அளித்து, தழைப்பகுதி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. தழைச்சத்தானது, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துப் பொருளை பயிர்கள் நன்கு எடுத்துக் கொள்ள உதவுகின்றது. காற்றில்லா நிலைகளில் கரிமப்பொருள் சிதைவுறுதல் ஏற்படும்போது நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினை கரிமப்பொருளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. மேலும் பயிரின் முன் வளர்ச்சி நிலைகளில் அதற்குத் தேவைப்படும் தழைச்சத்தினை, நீர் முழ்கிய மண்ணில் தழைச்சத்தின் நிலையான தன்மையான அமோனியா வடிவத்தில் பயிர் எடுத்துக் கொள்கிறது. லிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண் ஊட்டச்சத்துப் பொருட்கள்
நெற்பயிரில் தழைச்சத்து அதிகமாய் தேவைப்படும்
முன் தழை வளர்ச்சி பருவத்தில் பயிருக்கு உரமளித்தால் துார்கள் உற்பத்தி அதிகரித்து, அதிக விளைச்சல் கிடைக்கும். மணிச்சத்து, குறிப்பாக முன் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது. மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே இயங்கும் தன்மை கொண்டு, வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது. (குறிப்பாக சல்லி வேர்கள்), மேலும் துார்கள் வைப்பது மற்றும் முன்னரே பூத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது
நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சித் தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்குவதற்கும் சாம்பல் சத்து போதுமான திறனை அளிக்கிறது.
சாம்பல் சத்தானது, மாவுச்சத்து உருவாகுவதற்கும், சர்க்கரை உற்பத்தி மற்றும் இடமாற்றத்திற்கும், மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பயிர்களுக்கு தனி மதிப்பை வழங்குகிறது. நொதிப் பொருள் செயற்பாட்டில் பங்கு வகிக்கிறது.
ஒளிச்சேர்க்கைப் பொருள் உற்பத்தியாகவும், அவைகளை வளரும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உதவுகிறது.
மற்ற ஊட்டச்த்துக்களை முறையாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது.
துார்கள் வைப்பது, பயிர்ச்செடி கிளை உருவாக்கம் மற்றும் தானியத்தின் அளவு மற்றும் எடை அதிகரிக்கவும் துணைபுரிகிறது. மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மணிச்சத்து போதுமானதாக இல்லையென்றாலும், நெற்பயிரின் வேர் அமைப்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையிலும், மணிச்சத்து கூடுதலாக தேவைப்படுகின்றது மேலும் மணிச்சத்து பயிர்களில் நோய் எதிர்க்கும் திறனை அதிகரித்து, தானியப் பயிர்களை வலிமையாக்குகிறது. இதனால் பயிர் சாய்தல் தன்மையை குறைக்கிறது.
மேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு அதிகமாக தழைச்சத்து இருப்பின் அதனை மணிச்சத்து ஈடு செய்கிறது. பயிர் எடுத்துக்கொண்ட சாம்பல் சத்தில் 80 சதவிகிதம் அளவு வைக்கோலில் தான் காணப்படுகின்றது. மணல் கலந்த மண்ணில் தான் சாம்பல்சத்தின் தேவை அதிகமாய் காணப்படுகிறது. கால்சியம் என்ற சுண்ணாம்புச்சத்து பயிரில் உள்ள பெக்டினுடன் “கால்சியம்” இணைந்து “கால்சியம் பெக்டேட்” உருவாகிறது. இவை உயிரணு சுவரின் முக்கியமான ஆக்கக் கூறாக விளங்குகிறது.
மேலும், சுண்ணாம்புச்சத்து சிறந்த வேர் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.
மெக்னீசியம் பச்சையத்தின் முக்கிய ஆக்கக் கூறாக விளங்குகிறது மெக்னீசியம். பொதுவாக குறைந்த அளவு மெக்னீசியமே பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் சாம்பல்சத்து பற்றாக்குறைக்கு அடுத்தே, மெக்னீசியத்தின் பற்றாக்குறை காணப்படுகிறது
பச்சையம் உற்பத்தி, புரதச்சேர்க்கை மற்றும் பயிர் வடிவம் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு கந்தகச்சத்து முக்கிய பங்களிக்கிறது. வைக்கோல் மற்றும் செடித்தண்டுகளின் முக்கிய ஆக்கக்கூறாக கந்தகம் விளங்குகின்றது
பச்சையம் சேர்க்கைக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
மேட்டுப்பாங்கான நில மண்ணில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. “சர்க்கரை போரேட்” கூட்டமைப்பை உருவாக்கி சர்க்கரையை இடமாற்றம் செய்கிறது
தாமிரச்சத்து: “பிளாஸ்டோசையனின்” (தாமிரச்சத்து கொண்ட புரதம்) என்பதின் முக்கியக்கூறு தாமிரம்.இது இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமானது
.
வேர் வளர்ச்சிப் பொருள் ஆக்கம் மற்றும் புரதச்சத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது.
மாங்கனீசு, நைட்ரேட் குறுக்கம் மற்றும் நிறைய சுவாச நொதிகளின் செயற் ஊக்கியாகும். ஒளிச்சேர்க்கையின் போது உயிரியம் பரிமாற்றத்திற்கு மாங்கனீசு தேவைப்படுகிறத
மாவுப் பொருள் மற்றும் தழைச்சத்து ஆக்கநிலைகுழைவில் பங்களிக்கும் நொதிப் பொருள் அமைப்புகளுடன் செயலாற்றுகிறது.
மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மாங்கனீசு சத்து போதுமானதாக இருக்கும்.
சிலிக்கான் நெற்பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. பயிர். வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனுக்கு முக்கிய தனிமமாக சிலிக்கான் விளங்குகிறது. சிலிக்கான் அளிப்பதால், பயிரின் வலிமை மற்றும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும்
உதவுகிறது. இதனால் சிறந்த நெற்பயிர் விளைச்சல் கிடைக்கும் .
பயிர் வேர்கள் சிலிக்கான் சத்தை, சிலிக்கான் அமிலமாக எடுத்துக் கொள்கிறது.
:”இவ்வளவு கனிவளமும் எங்கள் கிராமத்தில் உண்டா “ ? இன்னொரு சபை அங்கத்தினர் கேட்டார்
“ உண்டு என்பதால் தானே உங்களிடம் வந்துள்ளோம் அதோ தெரிகிறதே மலை, அங்கும் கனி வளம் உண்டு . மலையின் மண்னின் சிவப்பு நிறம் அதற்கு அத்தாட்சி . இது போன்று வேறு சில கிராம அவிபிருத்தி திட்டங்களில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். உங்கள் கிராமத்தில் உள்ள கனி வளத்தை பாவித்து ஒரு தொழிற் சாலையை அரசாங்க அணுமதியோடு உருவாக்க உங்களுக்கு சம்மதமா.? அந்த தொழிற் சாலை “முல்லை ஆலை” என்ற உங்கள் ஊர் பெயருடன் இயங்கும் . என்ன உங்களுக்கு சம்மதமா”? .
:உடனே நாங்கள் பதில் தர முடியாது. பலரோடு கலந்து ஆலோசித்து ஒரு மாதத்தில் பதில் தருவோம்.”: நடராஜர் சொன்னார்
***
முல்லைவனத்தின் கிரம சபை பல தடவைகள் சந்தித்து பேசியது, அப்போது தூத்துக்குடி துறை முகத்தில் அதிகாரியாக வேலை செய்யும் நடராஜரின் மகன் சிவாராஜா குடும்பத்தொடு கிராமத்துக்கு வந்த போது அவரின் தந்தை, ஆனந்தன என்பவர் மூவரோடு வந்து கிராம அபிவிருத்தி பற்றி பேசிய விபரத்தை சொன்னார் சிவாராஜா கிராம சபை அங்கத்தினர்களை சந்தித்து பேசினார்.
“வெகு தூரத்தில் உள்ள உங்களுக்கு தூத்துக்குடி அருகே உள்ள குமாரரெட்டிபுர கிராமத்தில் நடந்த விசயம் தெரியாது. அந்த கிராமத்தில் உள்ள ஸ்டேர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளும் வாயுக்களும் மக்களின் தேக நலத்தை புற்றுநோய் , சிறு நீரக ,ஈரல் . தோல் சம்பதமான வியாதிகளால் பாதித்தது . கிராமத்தின் சூழலை மாசுப் படுத்தி உள்ளது. இதே போன்று வடக்கில் உள்ள போபால் நகரத்தில் இருந்த யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து 1984 ஆண்டில் வெளியேறிய நச்சு வாயு 550,000 மக்களை பாதித்தது . ஆலைக்கு அருகே உள்ள குப்பத்தில் வாழ்ந்த 3.800 பேர் உயர் இழந்தனர். இது போன்ற நிலமை பசுமை நிறைந்த முல்லைவனக் கிராமத்துக்கு வரவேண்டுமா ? இது வெகு தூரத்தில் உள்ள உங்களுக்குத் தெரியாது ஆலையை மூடும் படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி பிரயோகம் செய்து பலர் இறந்தார்கள் இந்த நநிலை முல்லைவனத்துக்கும் வரவேண்டுமா “ ?: சிவரஜா கேட்டார்
:அட கடவுளே வெகு துரத்தில் உள்ள எங்களுக்கு இது தெரியாதே. எங்கள் கிராமம் அந்த நிலைக்கு போகக் கூடாது . ஆனந்தன் என்பவர் தலைமையில் வந்தவர்கள் எங்கள் மூளையை சலவை செய்ய முயற்சித்திருக்கிறார்கள் அடுத்த முறை அவர்கள் சம்மதம் கேட்டு வரட்டும் தக்க பதில் சொல்லுவோம் .. தம்பி சிவராசா நீர் செய்தி சொன்னதுக்கு நன்றி. இனி நாங்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுப்போம் ” என்றார்கள் சபை அங்கத்தினர்கள்.
****
( உண்மையும் புனைவும் கலந்தது
நன்றி நெல் வல்லுனர் அமைப்பு )