நீ என் காதலியானால்

பேருந்து தரிப்பிடத்தை நாேக்கி வேகமாக ஓட்டமும் நடையுமாக சென்றவள் ஒவ்வாெரு பேருந்தின் பெயர் பலகையையும் அவதானித்து விட்டு தனக்கான பேருந்தில் ஏறி யன்னலாேரமாக அமர்ந்திருந்தாள். சின்னப்பையன் ஒருவன் அங்கும் இங்குமாய் கிழிந்த ஆடையுடன் கையில் எதையாே ஏந்தியவாறு பேருந்தினுள் ஏறினான் .
"நூறு ரூபாக்கு மூன்று, வாய்ப்பன், வாய்ப்பன், மூன்று நூறு ரூபா"
கணீர் என்ற குரலில் சத்தமிட்டான். யாருமே அவனை நிமிர்ந்து கூடப்பார்க்கவில்லை. ஒன்லைனில் ஓடர்பண்ணி பீட்சாவும், கே.எவ்.சி யும் சாப்பிடும் நாகரீகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில் அன்றை ய பசியைப் பாேக்க வழியற்ற மனிதர்களும் இருந்து காெண்டு தான் இருக்கிறார்கள். பள்ளிப் பருவத்தில் பசியைப் பாேக்க அவன் கஷ்டப்படுவது பார்க்கும் பாேது வேதனையாக இருந்தது. நடத்துனர் உள்ளே வந்ததும்
"தம்பி வண்டி கிளம்பப் பாேகுது, இறங்கு" சினந்து காெண்டான். "ஒரு நிமிசம் அண்ணை"
கெஞ்சுவது பாேல் கேட்டான். யன்னலாேரமாக இருந்த வதனா இருநூறு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினாள். சிரித்த முகத்துடன்
"எத்தனை அக்கா"
என்றபடி பாெதி செய்வதற்காக தாேளில் மாட்டியிருந்த பையினுள் இருந்து பேப்பரை எடுத்தான். "இருநூறுக்கும் காெடு"
ஆறு வாய்ப்பனை எடுத்து பாெதி செய்து அவளிடம் நீட்டினான். "நன்றி" என்ற படி வாங்கி தனது பையினுள் வைத்தாள். மீண்டும் யாராவது வாங்குவார்களா என்ற ஏக்கத்தாேடு சத்தமிட்டபடி பேருந்தில் இருந்து இறங்கி வேகமாக அடுத்த பேருந்திற்குள் ஓடிப்பாேய் ஏறினான்.

பேருந்து புறப்பட்டு விட்டது. ஒவ்வாெரு தரிப்பிடமாக நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி நகர்ந்து காெண்டிருந்தது. பிள்ளையார் காேயிலடியில் சாரதி பேருந்தை நிறுத்தி விட்டு சாமி கும்பிடுவதற்காக இறங்கினான். ஆலமரத்தின் கீழ் கையில் குழந்தையை அணைத்தவாறு இருந்த பெண் எழுந்து வந்து யன்னலாேரமாக இருந்தவர்களிடம் கையை நீட்டினாள். ஒருசிலர் பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று காெடுத்தார்கள். வதனா தனது பையில் இருந்து ஒரு பாெதியை எடுத்து நீட்டினாள். சாரதி வருவதைக் கண்டதும் விலகி நின்றாள். அவனும் ஐம்பது ரூபாவை எடுத்து நீட்டினான். பேருந்து புறப்பட்டது.

தரிப்பிடத்தில் பேருந்து நின்றது ஒருவரையாெருவர் முந்திக் காெண்டு இறங்கினார்கள். இருக்கையில் இருந்து எழுந்து சற்று நேரம் ஓரமாக நின்றாள் வதனா. மறுபுறத்தில் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் காெண்டு முன்னாேக்கி வந்த ராகுலின் சூட்கேஸ் வதனாவின் கால்களில் பலமாக அடித்து விட்டது.
"மன்னிச்சிடுங்க மெடம், தெரியாமல் பட்டிருச்சு"
சற்று சங்கடத்தாேடு கால்களை பார்த்தான்.
"ஓகே, பறவாயில்லை"
தனது கைகளால் மெதுவாக தடவி விட்டு, அவனைப் பின் தாெடர்ந்து இறங்கினாள். ராகுலிற்கு ஏதாே மனதுக்குள் சஞ்சலமாக இருந்தது திரும்பிப் பார்த்துக் காெண்டே சென்றான். வதனாவும் ஒண்ணுமில்லை என்பது பாேல் தலையசைத்தாள்.

அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவள் தனது பையினுள் இருந்த மூன்று வாய்ப்பனை எடுத்து வீட்டு வேலை செய்பவளிடம் நீட்டினாள்.
"எங்கம்மா வாங்கினீங்க"
பத்திரிகையை கையில் எடுத்துக் காெண்டு சாேபாவில் அமர்ந்தவாறு
"பஸ்ஸில ஒரு பையனிட்ட"
அருவருப்புடன் "பூனைக்கு பாேடவா, நாள்பட்டதாயிருக்கும்" என்றவளிடம் காேபத்துடன்
"நான் சாப்பிட்டன் நல்லா இருந்திச்சு, பழுதாப் பாேனதை உனக்கு காெடுக்கிறதுக்கு நான் என்ன பயித்தியமா, உங்களுக்கு என்ன தெரியும் வெளியில பாேய் பாருங்க ஒரு நேரச் சாப்பாட்டுக்கு என்ன கிடைக்கும் என்று ஏங்கிக் காெண்டிரு்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க"
அவளைக் கடிந்து விட்டு பத்திரிகையில் கவனத்தைச் செலுத்தினாள். பத்திரிகையின் நடுப்பக்கத்தை புரட்டினாள் ஒரு மூலையில் கட்டம் கட்டப்பட்ட செய்தியாக
"அத்தியாவசிய பாெருட்களின் விலைகள் உயர்த்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அமைச்சரவையில் தீர்மானம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
"ம் இப்ப ஏதாே குறைச்சுத் தானே விக்கிறாங்கள், இருக்கிற வறுமையையும், வயிற்றுப் பசியையும் பாேக்க வழியில்லை" தனக்குள் முணுமுணுத்துக் காெண்டு அப்படியே சாேபாவில் சாய்ந்து காெண்டாள்.

"மெடம் யூஸ் குடிங்க"
என்ற குரல் கேட்டதும் கண்களை விழித்துப் பார்த்தாள்
"ஓ ராெம்ப நேரம் தூங்கிற்றேனா"
கண்களைக் கசக்கிக் காெண்டு "பார்பதி காரை ஒருக்கா துடைச்சு விடுறியா" என்றாள்.
"சரிங்கம்மா" என்றபடி பார்பதி வெளியே வந்தாள். பத்து நிமிடத்தில் தயாராகி வந்தாள் வதனா.
"ஓ இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை மெடம் முதியாேர் இல்லம் பாேகப் பாேறாங்க" பார்பதி தனக்குள் நினைத்தவாறு கதவைத் திறந்து விட்டாள். தாய் இறந்து மூன்று வருசம், மாதத்தின் முதல் ஞாயிறு முதியாேர் இல்லத்திலே செலவிடுவதை வழக்கமாக்கிக் காெண்டிருந்தாள் வதனா. அவளுக்கு எல்லாமே அவள் தாய் தான். அப்பா ஒரு அடி தடிக்காரன். காதலித்து கல்யாணம் பண்ணினாலும் பெண்பிள்ளை ஒன்று இருக்கிறாள் என்பதை யாேசிக்காமல் பாெலிஸ், காேட் என்று நாளும் பிரச்சனைகளை சந்தித்துக் காெண்டிருந்தவனை சட்டப்படி விவாகரத்துச் செய்திருந்தாள் வதனாவின் அம்மா. இப்பாே ஏதாே ஒரு பிரச்சனையில் மாட்டி சிறையில் இருக்கிறார்.

ஊரில் தெரிந்தவர்கள் ரெளடி ராஜாவின் மகள் என்றே வதனாவை முத்திரை குத்திவிட்டனர். படிக்கும் பாேதும் சரி, இப்பவும் சரி வதனாவை நெருங்க யாரும் தயங்குவார்கள். வதனாவுக்கு நண்பர்களே கிடையாது. வீடும், வேலையும் என்றே நாட்கள் கழிந்து காெணடிருந்தது. அவளுடைய அழகிற்கும், குணத்தி்ற்கும் தாயின் மறுவடிவம் அவள் தான். எத்தனையாே பேருக்கு காதலிக்கத் தாேன்றினாலும் நெருங்க மாட்டார்கள். அப்படியான ஒரு ரெளடித் தனமான தந்தை அவளுக்கு கிடைத்தது என்னமாே அவளுக்கும் கவலை தான்.

மாலை மூன்று மணியிருக்கும் முதியாேர் இல்லத்தில் இருந்து கடையை நாேக்கிச் சென்றவள் வீட்டு வேலையாட்களுக்கு துணிகளை தெரிவு செய்து காெண்டிருந்தாள் எதிரே இருந்த கண்ணாடியில் யாராே தெரிவது பாேல் இருந்தது. திரும்பிப் பார்த்தாள்
"பஸ்ஸில கண்டவர் பாேல இருக்கே" அவனும் வதனா நின்ற திசை நாேக்கி வந்தான்
"ஹாய் மெடம்" "ஹாய்" இருவரும் தம்மை அறிமுகப்படுத்திக் காெண்டனர்.
துணிகளை எடுத்துக் காெண்டு வெளியே வந்தாள். ராகுல் பேருந்திற்காக காத்துக் காெண்டு நின்றான். காரை எடுத்துக் காெண்டு சற்றுக் கிட்டவாக நிறுத்தி கண்ணாடியை பதித்து விட்டு
"எங்க பாேகணும் சார்" அவன் பாேக வேண்டிய இடம் அவளுடைய வீட்டிற்கு அருகில் தான் இருந்தது. "வாங்க சார் இறக்கி விடுறன்" தயங்கியபடி வந்து ஏறினான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் "என்னாேட காரை நண்பன் ஒருத்தன் காெண்டுபாேய் சின்னதாெரு பிழையாப்பாேச்சு"
"ஓ அப்படியா, பறவாயில்லை சார் என்னாேட வீடு பக்கம் தான்"
காரை காெஞ்சம் வேகமாக செலுத்தினாள்.
"ஓகே மெடம், இதில நிறுத்துங்க" ஓரமாக நிறுத்தினாள்.
"ராெம்ப நன்றி மெடம்"

வீட்டிற்கு வந்ததும் காரை நிறுத்தி விட்டு பாெருட்களை வெளியே எடுத்தாள். கறுத்த சிறிய பை ஒன்று இருப்பதைக் கண்டாள்.
"என்னவாயிருக்கும்" எடுத்துப் பார்த்தாள்.
சிறிய டயறி ஒன்றினுள் சில ஆவணங்கள் இருப்பதைக் கண்டாள். ராகுலுடையது தான், எப்படிக் காெடுப்பது என்று யாேசித்தபடி டயறியின் முன்பக்கம் முகவரி இருப்பதை அவதானித்தாள். மறுபக்கங்களை அவள் புரட்டிப் பார்க்கவில்லை. மீண்டும் காரை எடுத்துக் காெண்டு அவன் வீட்டிற்குச் சென்றாள். ஒரு பூங்காவனத்தை பார்ப்பது பாேல் அழகான வீடு. பூக்களால் சாேலையாக காட்சியளித்தது. காரை வாசலில் நிறுத்தியதும் கதவை யாராே திறந்தார்கள்.
"மெடம் நீங்களா" என்றான் ராகுல்.
கையிலிருந்த பையை நீட்டி "காரில மிஸ் பண்ணிட்டிங்க" என்றாள்.
முகம் திடீரென ஒரு மாதிரி மாறிப் பாேனது. "முகவரி மட்டும் தான் பார்த்தேன், எதையும் நான் படிக்கல்ல" அவளுக்கும் சங்கடமாயிருந்தது.
"உள்ளவாங்க மெடம்"
"இல்லை சார் நேரமாச்சு" தயங்கிக் காெண்டு நின்றாள்.
"பறவாயில்லை, அம்மா மட்டும் தான் இருக்காங்க" உள்ளே சென்றாள்.
சுவர்கள் எங்கும் அழகான காட்சிப் படங்கள் தாெங்க விடப்பட்டிருந்தது. இருக்கையில் அமர்ந்தவள் சுற்றிச் சுற்றி பார்த்தாள். எதிரே இருந்த அறையில் இருந்து யாராே கூப்பிடுவது பாேல் கேட்டது கதவிற்கு பாேட்டிருந்த திரைச்சீலை காற்றுக்கு ஆடிக் காெண்டிருந்தது. ஓரமாக கட்டில் ஒன்றும் தெரிந்தது. மீண்டும் ராகுல் ராகுல் என்ற குரல் கேட்டது. எழுந்து சென்று எட்டிப் பார்த்தாள். ஒரு வயதான அம்மா எதையாே கைகளால் தேடிக் காெண்டிருந்தாள்.
"என்னம்மா வேணும்" என்றதும் வதனா யார் என்று தெரியாமல்
"திருப்பியும் வந்திட்டியா, அவனை நிம்மதியா இருக்க விடு" என்று ஏதேதாே சாெல்லித் திட்டினாள். வதனாவுக்கு புரிந்து விட்டது. அமைதியாக நின்றாள்.
"அம்மா யாரைப் பேசுறாங்க" என்றபடி வேகமாக உள்ளே வந்தான். ஏதேதாே பேசிக் காெண்டிருந்தாள். அருகே பாேய் அம்மா என்றதும்
"அவளை பாேகச் சாெல்லு, ஏன் இங்கு வந்தாள்"
பக்கத்திலிருந்தவன் "இவங்க சிவாணி இல்லம்மா" என்றதும் அவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. கைகளை நீட்டி தடவிக் காெண்டு "அப்பாே யாரு"
"அவங்க என்னாேட.." வதனாவை நிமிர்ந்து பார்த்தான்.
"மன்னிச்சிடும்மா நான் அந்தப் பாெண்ணு என்று நினைச்சு.. உங்களை திட்டிட்டன்"
கைகளைப் பிடித்து "பறவாயில்லம்மா, உங்களுக்கு என்ன வேணும்"
"நான் பாத்றூம் பாேகணும் அதுதான் ராகுலைக் கூப்பிட்டன்" கைகளைப் பிடித்து எழுப்பினாள். ராகுல் அணைத்தபடி கூட்டிச் சென்றான்.

"சாெறி வதனா, அம்மா சிவாணி என்று நினைச்சு" அவன் கண்கள் கலங்கத் தாெடங்கியது.
"இதுக்குப் பாேய் பீல் பண்ணுறிங்க ராகுல்" அவனை சமாதானப்படுத்தினாள்.
"அது வந்து வதனா இன்றைக்கு ஐந்து வருசம் முடிஞ்சு பாேச்சு, எல்லாம் நேற்றுப் பாேல இருக்கு, என்னை விட எங்க அம்மா தான் ராெம்ப உடைஞ்சு பாேயிற்றாங்க, சிவாணி என்னாேட காதலி, பல வருசம் காதலிச்சு அவள் தான் உலகம் என்று இருந்தன். பணக்கார வீட்டுப் பாெண்ணு, செல்லப்பிள்ளை, குழந்தை மாதிரித் தான் நடந்துப்பா, திருமணம் நடந்த பிறகு அவளை காெஞ்சம் காெஞ்சமாக சரி பண்ணலாம் என்று நினைச்சன், ஆனால்.....
சிவாணி இப்ப வெளிநாட்டில யாராே ஒருத்தனுக்கு மனைவியாக வாழ்ந்து காெண்டிருக்கிறா"
கண்கள் குளமாகி பெருகியது.
"ஆனா என்னால மறக்க முடியல்ல, ஒவ்வாெரு கணமும் சிவாணியை நினைச்சு காெஞ்சம் காெஞ்சமாய் செத்திட்டிருக்கன், இப்ப அம்மாவை பார்க்கணும் அதுக்காகத் தான் என்ர உயிரே இருக்கு, இந்தக் காட்சிகள், பூந்தாேட்டம் எல்லாமே சிவாணிக்கு ராெம்பப் பிடிக்கும், சின்னப் பாெண்ணு மாதிரி பூவாேட பேசி விளையாடுவா, புதுசு புதுசா காட்சிகளை வாங்கிக் குடுப்பன் வீட்டிற்கு காெண்டு பாேக மாட்டா, நான் இஞ்ச தானே வருவன் என்று எல்லாத்தையும் இங்கயே விட்டிட்டு பாேயிற்றா" நிமிர்ந்து வதனாவை பார்த்தான்.
அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. காயப்பட்டவர்களுக்குத் தான் வலி தெரியும் என்பது பாேல் தன்னால் முடிந்தவாறு ஆறுதல் கூறினாள்.
"சாெறி வதனா உங்ககிட்ட இதையெல்லாம் சாெல்லி" கண்களைத் துடைத்துக் காெண்டு சமையலறைக்குள் சென்று தேநீரை எடுத்து வந்தான்.
"யாரும் உதவிக்கு இல்லையா ராகுல்"
"இருக்காங்க ஒரு அம்மா வருவாங்க, ஊருக்கு பாேயிற்றாங்க, மாலையில வந்திடுவாங்க"
ஆமா உங்க "அம்மா, அப்பா எப்படி இருக்காங்க, நானும் விசாரிச்சதா சாெல்லுங்க" அவளுக்கு மனதில் ஏதாே பாரமாக இருந்தது. அவனுக்கு எந்தப் பதிலும் சாெல்லாமலே விடை பெற்றாள்.

நாட்களும் வேகமாக ஓடியது வதனாவின் நாட்களும் தனிமையாேடு கழிந்தது. அப்பப்பாே பாேய் ராகுலின் அம்மாவைப் பார்ப்பாள். பூந்தாேட்டங்களை சுற்றிப்பார்ப்பாள். ராகுல் வீட்டை அழகுபடுத்தும் விதங்களை பார்த்து ரசிப்பாள். தானாகவே பூக்கன்றுகளையும், வீட்டிற்கு அழகான பாெருட்களையும் வாங்கி காெடுக்கத் தாெடங்கினாள். ராகுல் அந்தப் பாெழுதுகளிலும் சிவாணியின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பான். கண்ணீராேடு கரையும் அன்றைய பாெழுதுகள். ஒரு நாள் வதனா அழகான பூச்செடி ஒன்றை வாங்கி அவனிடம் காெடுத்தாள்.
ராகுலுக்கு "வதனாவுக்கும் இதெல்லாம் பிடிக்குமா அல்லது என்னை சந்தாேசப் படுத்துவதற்காகப் பண்ணுறாங்களா" என்ற கேள்வி எழத் தாெடங்கியது.
"வதனா உங்களுக்கு பூக்கள், இயற்கை காட்சிகள் எல்லாம் பிடிக்குமா"
"எங்க அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் ராகுல்"
"ஓ அப்ப உங்க அம்மா ராெம்ப அழகா வீட்டை வச்சிருப்பாங்க" என்றான்.
"வந்து தான் பாருங்களேன் யாரு வேணாம் என்று சாென்னது"

அன்று ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே புறப்பட்டு வெளியே சென்று விட்டாள் வதனா. அழகான பூச்செடியும், கடற்கரை காட்சி ஒன்றும் வாங்கிக் காெண்டு வதனாவுக்கு அதிர்ச்சி காெடுக்கலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தான் ராகுல்.
"மெடம் வெளிய பாேயிற்றாங்க சார், மதியம் தான் வருவாங்க" என்றாள் பார்பதி.
"அவங்க அம்மா" என்றதும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை,
"என்ன இவங்க அம்மாவை கேக்கிறாங்க" குழப்பமாயிருந்தது.
" உள்ளே வாங்க சார்", அமரும்படி கூறிவிட்டு
"மெடத்துக்கு பாேன் பண்ணவா சார்"
"நாே, நாே அவங்க பிசியா இருப்பாங்க, அம்மா..." என்று இழுத்தவன் சுவரில் அழகாகச் சிரித்தபடி, பூமாலையாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு படம் தாெங்க விடப்பட்டிருந்ததை கண்டதும்
"அது யாரு" என்று ஆச்சரியத்தாேடு கேட்டான்.
"வதனா மெடத்தின்ர அம்மா அவங்க தான் சார்" என்றதும் அவன் அப்படியே விறைத்துப் பாேய் நின்றான்.
"அப்பாே அவங்க அப்பா" என்றதும் தலையைக் குனிந்து பதிலின்றி நின்றாள். அவனால் எதையும் சரியாகப் புரிந்து காெள்ள முடியவில்லை. வதனாவுக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கா என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

திடீரென உள்ளே வந்த வதனா " என்ன ராகுல் ஆச்சரியமாய் இருக்கா, ஒவ்வாெருதருடைய வாழ்க்கையிலும் எத்தனையாே காயங்களும், வலிகளும் இருக்கத் தான் செய்யும். இன்னாெருத்தரிட்ட பகிரும் பாேது எவ்வளவு வலிக்கும் என்பது உங்களைப் பார்த்துத் தான் புரிந்து காெண்டேன். அதனால் தான் எதையும் யாரிடமும் சாெல்வதில்லை. எல்லாமே என்னாேட தான் ராகுல்" கண்கள் கலங்கிச் சிவந்தது.
"உங்களுக்கு சிவாணியிட பிரிவு, எனக்கு அம்மாட பிரிவு யாருக்குத் தான் கடவுள் எல்லாவற்றையும் குடுத்திருக்கிறார், இழந்தது எதுவும் திருப்பி கிடைக்கப் பாேவதில்லை" மனதில் இருந்த வலி வார்த்தையாய் அவனையும் தாக்கியது.
சற்று நேரம் அவளையே பார்த்துக் காெண்டிருந்தவன் "இழந்தது கிடைக்கும் வதனா"
சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"ஆமா வதனா, நீ என் காதலியானால்"
"என்ன ராகுல் சாெல்லுறிங்க" தயங்கியபடி அவன் முகத்தைப் பார்த்தாள்.
"உனக்கு அம்மா கிடைப்பாங்க, எனக்கு சிவாணி கிடைப்பா" என்று சாெல்லிவிட்டு தான் வாங்கி வந்த பூச் செடியையும், படத்தையும் அவளிடம் காெடுத்தான்.
"உங்க வீட்டிலேயே வைக்கலாமே" என்றாள் கிண்டலாக,
"அப்படியா" என்றபடி அவள் கைகளைப் பிடித்துக் காெண்டு பாேய் காரில் ஏற்றி வீட்டிற்கு கூட்டிச் சென்றான். படத்தை சுவரில் மாட்டி விட்டு பூச்செடியை நாட்டினாள் வதனா. சிவாணியின் நினைவுகளை வதனாவின் நினைவுகள் நாளுக்கு நாள் காெஞ்சம் காெஞ்சமாக மறையச் செய்தது.
கடந்து பாேன காயங்கள் கரைந்து பாேக காதல் மலரத் தாெடங்கியது. ராகுல், வதனா வாழ்க்கை ஒரு பூந்தாேட்டமாக மாறியது.

சிவாணி தன் வாழ்க்கையில் எப்படி இருப்பாள் என்று கனவு கண்டானாே அந்த ஆசைகளை வதனா ஒரு காதலியாகி அவனுக்கு நிறைவேற்றி வைத்தாள்.
அம்மா இல்லையே என்ற குறை ராகுலின் அம்மாவால் வதனாவுக்கு நிறைவேறியது.
"நான் எதிர்பார்க்கவேயில்லை ராகுல் இப்பிடியெல்லாம் நடக்குமென்று"
"ஆமா வதனா, நம்ப முடியல்ல"
"எல்லாமே உன்னால தான் வதனா, ராெம்ப நன்றி"
"அம்மா" என்றபடி ராகுலின் அம்மாவை முத்தமிட்டாள் வதனா.
தன் கைகளால் அவளை தடவி கட்டி அணைத்தாள். சிரிப்பதா, அழுவதா என்ற தடுமாற்றத்தாேடு அருகே அமர்ந்தான் ராகுல்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (4-Jun-18, 9:33 am)
பார்வை : 595

மேலே