ஒரு மாலைநேர போர் தொலைக்க

சோம்பேறித்தனமான ஒரு மாலை நேரத்தில்
EVENING BORE தொலைக்க
தொலைக்காட்சியை சொடுக்கினேன்
ஓயாத தொலைத் தொடர் ..மூடினேன்
செல்லைச் சொடுக்கினேன்
புரியாத தமிழ்ப் பாடல் சுவையில்லாத் திசையில் இசை
கோவத்தில் அமுக்கி வைத்தேன்
செல் மணியின் அழைப்பு ....யாரோ என்று எடுத்தேன்
லோன் வேணுமா இன்வெஸ்ட்மென்ட் பண்ணறீங்களாக்கள் ,,,,!
மூடி மூலையில் விட்டெறிந்தேன்
பக்கத்திலிருக்கும் பார்க் பெஞ்சில் போய் அமர்ந்தேன்
தொலைவில் ஒரு காட்சி ...ஒரு காதல் ஜோடி முத்த ஏகாந்தத்தில் ...
கண்களை கர்சீப்பால் கட்டி பெஞ்சில் பின்னால் சாய்ந்தேன்
பார்க் காவலாளி கம்பால் தட்டி எவாக்குவேஷன் நோட்டீஸ் கொடுத்தான் !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-18, 3:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே