திருநெல்வேலி
பெண்ணுக்கு திரு சேர்ப்பதால் திருமதி ஆகிறாள்
ஆணுக்கு திரு சேர்ப்பதால் மதிப்பு பெறுகிறான்
ஆனால் திருவுக்கு பெருமை சேர்ப்பது இந்த திருநெல்வேலி
ஏன் என்றால் பெண்ணுக்கும் ஆணுக்கும்
ஏன் நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதே
இந்த தலம் அல்லவா !!!
ஒரு நெல்லையும் ஒரு உயிராய் நினைத்து
அதற்கும் ஒரு வேலி போட்டு
பாதுகாத்தது என்னே ஒரு நேயம் ...
நமக்கு பாடங்கள் பல கற்று தரத்தான் இத்தனை
திருவிளையாடல்களும் .....
ஆனால் நாம் இன்று என்ன செய்கிறோம் ???
ஒரு ஈ எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத
மரம் செடி கொடிகளை ஒன்று விடாமல் அளித்து
கட்டிடங்கள் காட்டுகிறோம்
கொஞ்சம் கூட மனித நேயம் இல்லாமல்
அனைத்தையும் அழித்து
நாம் மட்டும் சந்தோசமாக வாழ
என்னே ஒரு சுயநலம்
இப்படி ஒரு சுயநலம் நமக்கு தேவையா ???
சிறிது யோசிப்போம்
மக்களை நேசிப்போம்
இயற்கையை நேசிப்போம்
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவோம் !!!