ஒரு கிடாயின் மனு --- முஹம்மத் ஸர்பான்

அந்தப் பாதை வழியே
நான் நடந்து போவேன்
ஒரு கறுப்பு நிற கிடாய்
எனைப் பார்த்து கத்தும்
ஐந்து ரூபா ரோஜா கூட
பத்து முறை தீப்பற்றும்
எட்டு ரூபா பைசா கூட
நூறு கொலை செய்யும்
நகத்தை கழற்றி எடுத்து
காக்கைகள் விளையாட
கழுத்தை பற்றிப்பிடித்து
ஆந்தைகள் கை தட்டும்
வெள்ளி நிலா பூமி வந்து
ஓடும் நதிகளைத் தேடும்
ஊனும் சதையும் - இனி
நிலவின் காலில் ஒட்டும்
குப்பை அள்ள நூறு பேரு
கடிகாரம் போல துடிப்பார்
சாதியைக் கொல்ல யாரு
போர்வீரன் போல வருவர்
சமாதிகள் மேலே மோதி
காற்றின் நாக்கில் தும்மல்
சிநேகிதன் மூச்சை கோதி
கூத்தியின் காதில் கம்மல்
கிடாயின் அருகே அமரும்
என் மேல் ஜாதித் சிநேகிதி
சவரக்கத்தி மூலம் அவள்
தலையை வெட்டிப் போட
உதைபந்து போல நானும்
தலை இழந்து கால் கீழே
அந்தக் கறுப்புக் கிடாயின்
கண்களுக்குள் சிரித்தேன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (8-Jun-18, 10:32 am)
பார்வை : 398

மேலே