புதிய கல்யாணம்

கவிதை தெரியாது எனக்கு
கண்ணே உன்னை காணும் முன்பே

கவிஞனாய் மாறுகிறேன்
பெண்ணே உன்னை கண்ட பிறகு

கண்ணால் சிரிக்காதே
என் இதயம் நொறுங்குதடி

விழியோரம் வந்தவளே
கண் இமைப்போல் காப்பேன்

கண் எதிரே தோன்றியவளே
என் இதயத்தில் அமர்ந்தாயே

பூ மாலை சுடவே
மாலையில் சேர்ந்தோமே

வெள்ளாட்டு ஈரலை வறுத்து எடுக்க
நாட்டு கோழி குழம்பு கொதிக்க

வஞ்சிர மீனை வறுத்து எடுக்க
நாக்குல எச்சி ஊருதடி

பசில வயிறு துடிதுடிக்க
தொண்டைதான் சஹாராவாக

கண்ணுதான் தேடுதே
என் பொண்ஜாதி சீக்கிரம் வாடினு நா கூவ

மகிழ்ச்சி நீள வேண்டும்

வயதாகி போனாலும்
முட்டி செத்து போனாலும்

மூட்டு வலிதான் வந்தாலும்
முத்தம் குடுக்கும் காதலன்தான்

முட்டிபோட்டு தூக்குவான்னு
முந்தாநேத்து கனவு கண்டு

மூச்சுவாங்க சிரிச்சேனே
நெனச்சி பாத்தாலும் சிரிப்புவருது

சந்தோஷம் பெருக என்னிக்கும்
இன்றய பொழுது போல

வாழ்க வளமுடன்

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

எழுதியவர் : தமிழ்ரசிகன் (8-Jun-18, 10:40 pm)
சேர்த்தது : தமிழ் ரசிகன்
Tanglish : puthiya kalyaanam
பார்வை : 85

மேலே