கனவு
நேற்றெழுந்த கனவினை இன்றெழுந்து பார்த்தேன்
பொய்பிக்கும் மாய்யை என கண்ட உடன்
துவண்டேன்
காலமெல்லாம் கேட்டு ரசிக்கும் காய்ச்சலூட்டும்
சிரிப்பு கொண்டவள்
மென் மேனி பட சுட்டெரிக்கும் ஈர்ப்புத்
தீயை கொண்டவள்
காருண்ய மேகம் போல் காருண்ணியம்
கொண்டவள்
காரிருள் காற்றை போல் காரிகை
கொண்டவள்
இரவுக் கனவினில் பகல் திங்களை காட்டுபவள்
அதை கண்ட ஒரு கணம் பல திங்கள் கழிந்தது போல்
மாய்யைகளை ஊட்டுபவள்
கொய்து கொய்து உன் உள்ளக் கனியின்
சுவையினில் கொய்யப்பட்டேன்
ஐது ஐது உன் ஐம்பொறியின் ஐயில்
ஐக்கியம் ஆனேன்
அவள் முகம் காண நிஜம் துடித்தது
இரவு மட்டும் கடமை தவறா அவள்
அழகை காட்டியது
அவள் முக அழகை ஒரு சேர காட்டும்
ஒற்றை பருவை காண நிஜம் ஏங்கினாலும்
இரவில் என் நாசி அவள் பருவை உரசிக் கொள்கிறது
உனக்காகவே இரவின் தூரம் நீள வேண்டும் என்கிறேன்