திருமண அழைப்பிதழ்
தோழனானவன்
எனக்கு தோல் கொடுத்தவன் !
என் மீது
உரிமை கொண்டவன் !
மணமாலை சூடும்
மணமகனானான் !
ஏனோ எனக்கு
மட்டும் தெரியவில்லை
அவன் நெஞ்சில்
உயிராய் ஒருத்தி இருந்தாலென்று
அழகாய் அச்சடித்த
வண்ணப் பத்திரிக்கை !
அவன் திருமண நாளை
நினைவுபடுத்தியது!
என்னுள்ளம்
கவலை கொண்டது
உயிர்தோழியாய் நான்
அவன் உள்ளத்தை புரிந்துகொள்ளவில்லையேயென்று !
அவனை சந்தித்தேன்
அழைப்பிதழ் விடுத்த நாளில்
திடீர் பயணம்
அவனோடு சற்று உறவாட !
அவன் நேசித்தவள்
யாரென்று அறிந்து கொள்ள
கேள்விகள் விடுத்தேன்
அவனின் மௌனம் பதிலாய் வந்தது
என்னை சிறைபடுத்தியது !
கோபத்தீயாய் நோக்கினேன்
கலங்கின அவனின் கண்கள்
காலம் கை மீறினாலும்
உன் கனவுக் காதலி யாரென்றேன்
ஓர் பார்வை
கண்ணிமை கேட்கிறது
கண்ணே ஏன் கலங்குகிறாய் என்று
கண்ணிமைக்கு தெரியாது
கண்கள் கலங்கியதுக்கு காரணம்
கண்ணிமை தான் என்று
கண்ணே என்னை
கலங்க வைக்காதே
என் காதலியே !!!!