காதல்
என்னவள் தங்க நிறத்தாள்
தங்க நிலவாய் எனக்கமைந்தாள்
நானோ கரிய நிறத்தோன் -சிலர்
நிலவும்-அமாவாசையும் ஜோடியானது
எப்போது என்று பின்னே மறைவில்
கேலி செய்தனர்-அவர்கள் அறியாதது
ஒன்று, அதுதான் , என்னவள் இந்த
இருண்டவனுக்கு ஒளிதந்து குளிரவைக்கும்
இந்த மண்ணில் நான் கண்ட என்
கண்மணி நிலா -தங்க நிலா.