நிலைத்திடும் உன் முகமே

(நதியே நதியே பாடல் தழுவல்)

உயிரே உயிரே எந்தன் உயிரே நீயென் மகள்தானே
நீயென் மகள்தானே
ஒன்றா இரண்டா ஆனந்தம் நூறு நொடியினில் தந்தாயே
சிறு சிரிப்பினில் தருவாயே

பிறந்தாய் அன்று பிறந்தநாள் இன்று வாழ்த்தும் புவியல்லோ
பிறந்தாய் அன்று பிறந்தநாள் இன்று வாழ்த்தும் புவியல்லோ

சிறு சிரிப்பிலே கரைந்திடும் மனங்களே
கரைந்திடும் மனங்களில் நிலைத்திடும் உன் முகமே

சிறு சிரிப்பிலே கரைந்திடும் மனங்களே
கரைந்திடும் மனங்களில் நிலைத்திடும் உன் முகமே

தினம் தூங்கும் அறை தோறும் உன் கொலுசும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கவிதை வரும் கவிதை வரும் எதுகை தரும் மோனை தரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் தூங்கும் அறை தோறும் உன் கொலுசும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கவிதை வரும் கவிதை வரும் எதுகை தரும் மோனை தரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

நிலவின் பெருமை இரவில் அழகின் பெருமை உனதில்
தமிழின் பெருமை அறிந்தேன் பேச்சிலே
புல்லும் பூவாய் மாறும் பூவும் தொட்டால் மலரும்
மின்னும் மின்னல்கள் கண்ணீலே

தமிழால் உன்னை வாழ்த்தினோம் ஓஹோ
தரணி ஆள வாழ்த்தினோம் ஓஹோ

தமிழால் உன்னை வாழ்த்தினோம் ஓஹோ
தரணி ஆள வாழ்த்தினோம் ஓஹோ

சின்ன சின்ன பூவே சிரித்தாடும் பூவே
கண்களும் அழகு உந்தன் விரல்களும் அழகு
ஹோ....செல்ல செல்ல சிணுங்கல் பிடிவாத மறுத்தல்
உந்தனின் குணமே அது உந்தனின் குணமே

சிறு சிரிப்பிலே கரைந்திடும் மனங்களே
கரைந்திடும் மனங்களில் நிலைத்திடும் உன் முகமே

சிறு சிரிப்பிலே கரைந்திடும் மனங்களே
கரைந்திடும் மனங்களில் நிலைத்திடும் உன் முகமே

தினம் தூங்கும் அறை தோறும் உன் கொலுசும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே

உதிரத்தில் உருவாகி உயிருக்குள் உருமாறி
உயிருக்கு உணர்வாகும் உறவே
உதிரத்தில் உருவாகி உயிருக்குள் உருமாறி
உயிருக்கு உணர்வாகும் உறவே
நீ அருகே நீ அருகே இருந்துவிட சொர்கம் வேறன்ன வேண்டும்
நீ சிரித்தால் நீ சிரித்தால்
கவலைகள் யாவும் கரைந்து போக கூடும்

மகளே மகளே அன்பு மகளே நீயென் உயிர்தானே
நீயென் மகள்தானே
ஒன்றா இரண்டா ஆனந்தம் நூறு நொடியினில் தந்தாயே
சிறு சிரிப்பினில் தருவாயே

எழுதியவர் : ஜெகன் ரா தி (12-Jun-18, 8:51 am)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 5610

மேலே