நினைவின் வலி

என்னை விட்டு
நீயும்
செல்லவில்லை
என்னை
விட்டுப் போ
என்று
நானும்
சொல்லவில்லை........

இருந்தாலும்
நாம்
பிரிந்திருக்கிறோம்
அது விதியின்
வினை
விதியும்
ஒருவிதத்தில்
நமக்கு
நன்மை
செய்கிறது .

பிரிவு
காதலை
உணர்த்துகிறது
ஆனால்,
வலி மட்டும்
நெஞ்சில்
கூடுகிறது...........

வலியும்
ஒரு சுகம் தான்
அதை
நீ தருவதால்...
உன்
நினைவால்
வருவதால்.............

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 8:57 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
Tanglish : ninaivin vali
பார்வை : 694

மேலே