நீட்டு எ தீட்டு
பாட்டன் பூட்டன் படிச்சது இல்ல அப்பனும் அரிச்சுவடி தொட்டதில்ல
காசு பணம் கண் பார்த்தது இல்லை கஞ்சியும் மூணு வேலை குடிச்சது இல்ல
பள்ளிக்கூடம் போய் வரவே பாவி மனம் ஏங்கிடவே
மார்க்கெட்டுல மூட்ட தூக்கி என் அப்பன் படிக்க வைக்க
வேட்கையுடனேயே பள்ளி சென்று வெற்றி உடனே திரும்பி வந்தேன்
ஏழை சனத்துக்கு மருத்துவம் பார்க்க மருத்துவச்சி யாரும் இல்லை எனஅப்பத்தா கிழவி சொல்ல மருத்துவமும் படிச்சிடலாம்னு
கனவுக் கோட்டை கட்டி வச்சேன்
டாக்டர் சீட்டு கிடைச்சிடும் முன்னு நானும் இருக்க
நீட் எக்ஸாம் கேட்டு போட கதிகலங்கி நானும் நின்னன்
பாடத்திட்டம் ஒன்னு இல்ல-கல்வித் தரம் உயரவில்லை
நீட்டில் மட்டும் என்ன பொதுவுடமை
எதிர்த்துக் கேட்க கைக்கூலிகளுக்கு தைரியம் இல்லை
தட்டிக் கேட்கவும் நாதியில்லை
அரசியல் நாடகத்தில் என் கனவு பறிபோக
நீதிமன்றப் படி ஏறினேன் மனுநீதிச்சோழன் நம்பி
நீதியும் செத்துவிட்டது
ஏமாற்றமே ஒட்டிக்கொண்டது
மோடிகளின் ஜாடிகள் நீட்-டிய மோச கயிற்றில் வீழ்ந்து விட்டேன்
விதையாய் இம் மண்ணில் விழுந்து விட்டேன்
அடுத்த பிறவியிலாவது நீதி கிடைக்கும் என