கவிதைகள்

சில கவிதைகள் அவற்றைப் படித்து
படித்து பார்த்தும் அர்த்தங்கள் புரிவதில்லை
அந்த வரிகளில் அடைபட்டிருக்கும் சொற்களுக்கு
அவற்றை சேர்த்து படித்தாலும் தலைபிய்த்துக்கொண்டாலும்
அர்த்தங்கள் புரிவதில்லை ; அப்படியென்ன இவற்றில்
புதைந்துகிடக்கும் 'கம்பசூத்திரங்கள்'-கேள்விப்பட்டிருக்கிறேன்
சில சித்தர்கள் கவிதைகளில் பூக்கள் பழங்கள் பற்றி
வெளிப்படை அர்த்தங்கள் இருந்தாலும் அவற்றினுள்ளே
சூட்சுமமாய் புதைந்திந்திருக்கும் சில நோய்களின் குறிப்பு
அவற்றிற்கு மருந்து ஆனால் பலர் ,புதுயுக கவிதைகளில்'
வரிகளில் தெளிவு இருப்பதில்லையா இல்லை
புரியாத பல 'மாடர்ன் ஆர்ட்' போல இவைகள் இருக்கவே
சிலர் கவிதைகளை புனைவது இப்படியா
பாமரரும் படித்து மகிழ்ந்து தெளிவுபெறும்
பாரதியின் கவிதைகள்போல் எழுத இன்னும்
இவ்வகைக் கவிஞர்கள் விரும்பாதது எனோ தெரியலையே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jun-18, 5:13 am)
Tanglish : kavidaigal
பார்வை : 106

மேலே