கண்ணன் கீதம்

யமுனா நதி தீரத்தில்
நாவல் மரத்தடியில்
குழலூதி கொண்டிருக்கிறான்
கண்ணன் -அந்த மோகன இசைக்கு
மயங்கி யமுனை ஓடாமல்
நின்றுவிட்டாள், ஆவினங்கள்
மேய்வதை மறந்து அவன்
குழலோசையில் மெய்மறந்து
அவன் பக்கமே நின்றுவிட்டன
குயில்கள் கூவ மறந்தன
மயில்கள் ஆட மறந்தன
கோபியர்கள் தங்கள் வீட்டையே
மறந்து கண்ணன் பின்னே
அவன் குழலோசைக்கு பின்னே ............
எங்கிருந்தோ வந்ததோர் மெல்லிய
குரலோசை குயிலினும் இனிய
இசையாய் ....கண்ணா வா
மணிவண்ணா வா என்று....
கண்ணனும் ஊதுவதை சற்று
நிறுத்த ......அது அவன் ராதையின்
குரலே என்று தெரியும் மாயனுக்கு
மெல்ல குழலாள் தன இதயத்தை
நெருடுகிறான் ...அங்கு 'அவள்.
மாலவனின் இல்லாள் இலக்குமி
அங்கு காணவில்லை...........
மீண்டும் அந்த குயிலோசை
கண்ணா வா ...........அது
ராதையின் குரல் அல்லவா
அவன் ராதையின் .....அவன்
இதயத்தாமரையின் குரலல்லவா
இவன் குழலோசையும் அதற்கு
அடிமை, இவனும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jun-18, 5:46 pm)
Tanglish : Kannan keetham
பார்வை : 195

மேலே