இதயமே என்னுடன் பேசு

இதயமே......
சில விநாடிகளாவது
என்னுடன் பேசு....
நீ துடிப்பதோ எண்ணில்...
இருந்தும் மௌனம் ஏன்...???
ஆசையாய் சில முத்தங்கள்.....
செல்லமாய் ஓரிரு வார்த்தைகள்...
கரங்களை நீட்டி உன்னை அணைக்க
துடிக்கிறது நெஞ்சம்...
ஆனாலும் நீ விலகி செல்வது ஏன்...????
கொடிய விஷம் ஏதும் அருந்தவில்லை....
ஆனாலும் துடியாய் துடித்து சாகிறேன்.....
உன்னுடன் பேசாத பொழுதுகளில்.......

~லீலா லோகிசௌமி ~

எழுதியவர் : லீலா லோகிசௌமி (23-Jun-18, 4:32 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 564

மேலே