நீ

கனவுகள் களவாடப்படுகின்றன
கண்ணுறங்கும் பொழுதுகளில்...

நிமிடங்கள் நிஜம் இழக்கின்றன
நீ இல்லாத நேரங்களில்...

தனிமைகளும் ருசிக்கின்றன
தடம் பதித்த உன் நினைவுகளில்...

பேனாக்களும் உயிர் பெறுகின்றன
பெதும்பை உனை கவிதையாய் வடிப்பதில்

எழுதியவர் : பர்ஷான் (25-Jun-18, 9:51 am)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : nee
பார்வை : 255

சிறந்த கவிதைகள்

மேலே