நிஜமும், நிழலும்

ஸ்டுடியோவில் ஒரு ஷூட்டிங்
செட்டிங் : ஹீரோ ஒரு சரித்திர
சம்பந்தமான படத்தில் போர்க்களத்தில்
முன்னின்று படைகளை நடத்தி செல்கிறார்
மாமன்னனாய்-' சங்கு ஊதி'
(பின்னல் இசை: சங்கே முழங்கு ....சங்கே முழங்கு)
மன்னன் சங்கு ஊதுகிறான் ( ஹீரோ.வுக்கு பதில்
டூப் 'சங்கு ஊதிக்கொண்டே இருக்க)

டைரக்டர் : கட் .......கட்.கட் (அசிஸ்டன்ட் கிட்ட)
அவரை (டூப்பை) பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு
மீண்டும் வரச்சொல்லுங்க, ரெண்டாம் ஷாட் ல
இந்த சீன முடிச்சிக்கிடலாம்............ அது சரி நம்ம
ஹீரோ சார் எங்க........அட் லீஸ்ட் இந்த காட்சியை அவர்
செய்யாட்டியும் டூப் செய்யறதை ரசிக்கலாம்....

அசிஸ்டன்ட்: சார், அவர் கிறீன் ரூம்ல ஹாய்யா
தம் அடிச்சிக்கிட்டிருக்கார் .......
அவருக்கு லுங்கி பவர் இல்ல சார்
சங்கு ஊதா, ஊதிபாத்தாறு... காத்துதான்
வரதுன்னு.... டூப்பு போடா சொன்னாரு
டூப் சூப்பரா ஊதா அதையே மியூசிக்
டைரக்டர் ஒரிஜினல் சங்கு முழக்கம்ம
ரெகார்டும் பண்ணிட்டாரு சார்
அசல் அசல்தான்............
செய்பவர் ஒருவர்.....
பெரு இன்னொருத்தருக்கு ...........
பொய்யான காலம்....இதுல
மே பொய்யாகி, பொய் மெய்யாகும்..
சரி சரி, நமக்கென்ன ....சார், டூப்
ரெடின்னு எஸ்.எம்.எஸ் குடத்தாரு
ஷாட் போலாமா சார்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jun-18, 9:33 am)
பார்வை : 173

மேலே