விவசாயத்தின் மரண ஓலை
நாட்டில் நட்டுவைத்த மரத்தையெல்லம்
வெட்டிபோட்டு புதைக்கின்றார் மண்மூடி..
வீட்டில் பொட்டுவைக்காத பொட்டையெல்லாம்
பெட்டுபோட்டு தூங்கிறார் கண்மூடி
உலகம் போகிறது செய்யும் ஊழலுக்கு பின்னாடி!
கலகம் ஆகிறது இயற்கை சூழலுக்கு முன்னாடி!
இன்னாடி அடி! என்னாடி! இது என்ன தமிழ் மண்ணாடி
தமிழன் முகத்தை பார்க்கையில் காரிதுப்புது கண்ணாடி
மோடியோடு கைகோத்து கோடிகளை கோணியில் தைப்பீரோ!!
மூடிபோட்டு உழலை மூடிவைத்து எத்தனைநாள் வைப்பீரோ!!
மாடிவீட்டு ருசிக்காக கூரைவீட்டை இடிப்பீரோ!
வாடிவதங்கும் ஏழைகளை ஆளைவிட்டு அடிப்பீரோ!
கூடிகிட்டு ஊரை ஏய்க்க தேடிகிட்டு தேர்தலில் வந்து நில்வீரோ!!
ஓடிஓட்டு கேட்கையில் மூடிகிட்டு முகத்தை மறைத்து செல்வீரோ!!
-ஜோசப் அம்பேத்