சாக பழகு

சாக பழகு

அனைவரும் தயாராகுங்கள்
ஆயுட்காலத்தை முடித்து கொள்ள

இது வாழ தகுந்த பூமியல்ல
இனி வாழும் தகுதியுமில்லை
சாமாணியர்களுக்கு

கார்பரேட் நிறுவனத்திற்கும்
கார்பரேட் கைகூலிகளுக்குமே
அனுமதி உண்டு - இங்கு
ஆனந்தமாய் வாழ

தாவரங்களோடு மனிதர்களையும் கொன்று
தார் சாலை அமைக்க
ஆணை வந்ததால்
எங்களுக்கு வாக்கு போட
பிச்சை வாங்கியவர்கள்
காலி செய்யுங்கள்
உங்கள் கூடாரங்களை

இல்லையெனில் எங்களுக்கு
பிச்சை போடுபவர்கள்
உமிழ்வார்கள் எங்கள் மேல்

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு

எந்த மடையன் சொன்னது ?

உங்கள் விவசாய நிலத்தில்
அதிவேகமாக கார் ஓடினால்தான்
இது வல்லரசு

உங்கள் விவசாயத்தை அழித்து
எரிவாயு எடுத்தால்தான்
இது வல்லரசு

விவசாய நிலங்களில்
அடுக்குமாடிகள் கட்டினால்தான்
இது வல்லரசு

கையில் உள்ள பணத்தை
வங்கியில் போடவைத்து
மொத்தமாய் சுருட்டி கொண்டு
வெளிநாட்டுக்கு ஓடினால்தான்
இது வல்லரசு

உரிமைக்காக போராடுபவர்களை
அதிகார திமிரோடு
சுட்டு கொன்றால் தான்
இது வல்லரசு

கார்பரேட் சாமிகளுக்கு
பலி கொடுக்கிறோம்
உங்களையும்
உங்கள் நிலங்களையும்

ஆயினும்
விவசாயிகளே கலங்காதீர்கள்

மணலை விற்று
மலையை விற்று
விவசாயத்தை கொன்று
எரிவாயு விற்று
சாராயம் விற்றேனும்
கருணையோடு வழங்குவோம்
அனைவருக்கும்
இலவசமாய் வாய்கரிசி

அதனால் இன்றுமுதல்
அனைவரும் பழகி கொள்ளுங்கள்
சீக்கிரம் செத்து போக

எழுதியவர் : ந.சத்யா (29-Jun-18, 10:29 am)
சேர்த்தது : சத்யா
Tanglish : saaga pazhaku
பார்வை : 797

மேலே