உண்மை தெய்வம்

சூடாய்க் கொடுத்தால் சுடுமெனவே
சுவையாய்க் காய்த்தே ஆறவைத்து,
தேடிப் பிள்ளை குடித்திடவே
தேனீர் தந்திடும் தாய்மறவேல்,
கோடி கொடுத்தும் கிடைக்காதே
கொட்டிக் கொடுக்கும் தாயன்பே,
வாட மட்டும் விட்டிடாதே
உண்மை தெய்வம் தாயவளே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jun-18, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : unmai theivam
பார்வை : 65

மேலே