நீ இப்போதே வருவாயா சொல்
மிளகாய் தோய்த்து வேகும்
செந்தணலானது விழி
தீ பட்டு எரியும் இலவம்
பஞ்சானது மனம்
உன்னைக் காணாத போது
கோடை வெயிலில்
மேனியைக் கட்டித் தழுவும்
இதமான இளம் தென்றலாய்
என்னுடல் மென்மை பெற
நீ தான் எனக்கு வேண்டும்
என் விழியும் தண்மை பெற ..
இப்போதே என் காதலா....
அஷ்றப் அலி