கனவிலும்,கற்பனையிலும்
எழுதுவதற்கு என்னிடம் ஏதும் இல்லையோ??
இல்லை- எனக்குத்தான் எதைப்பற்றியும் எழுத தெரியவில்லையா??
விலைமதிக்க முடியாத தாய்மை!!
வியப்படைய வைக்கும் தந்தையின் பாசம்!!
விஞ்ஞான மாற்றம்!!
விடியலை தீண்டும் தென்றல்!!
காப்பாற்றப்பட வேண்டிய பெண்மை!!
களவாடப்படும் கனவுகள்!!
காற்றில் மிதந்துவரும் கற்பனைகள்!!
கண்ணியமில்லா சில கயவான்கள்!!
காழ்புணர்ச்சியில் நீந்தும் அரசியல்!!
மஞ்சள்வெயில் சூரியன்!!
மாலைக்கோர்க்கும் விண்மீன்கள்!!
மையலிடும் நிலா!!
மனதைமயக்கும்
குயிலி!!
ஊர்தொலைத்த இயற்கை!!
இன்னும் எவ்வளவோ??
இருந்தும்....
இவற்றையெல்லாம் எழுத மனமில்லாத நான்...
உன்னில் தொலைத்த என்னை எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறேன்
நான்!!
கனவிலும்,கற்பனையிலும்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
