விவாகரத்து
நானல்ல நாமென்பதை புரியாமல்
இருமனங்கள் இடைவெளியடைந்து
நம்பிக்கை தொலைந்துபோய்
திருப்தி திவாலாகி
சந்தேகக் களைகள் பெருகி
பேச மறுத்தும் மறந்தும்
பொறுமையை விலக்கிவைத்து
மனசெல்லாம் குப்பையாக்கி
வலியின் வழிநடந்து
சிரிப்பை வெறுத்து
மூன்றாமவர் முக்கியப்படுத்தப்பட்டு விவாகரத்து என்னும் விரும்பத்தகாத மன(ண)முறிவு நடக்கிறது...