பிரியும் தருணத்தில்

பிரியும் தருணத்தில்....
கவிதை by:
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

கருத்தொருமித்த காதலர்கள்
உருக்கமுடன் உறவாடி
பிரியும் தருணத்தில்
இமைகளில் கண்ணீர் தேக்கி
இதழ்கள் பேசாமல்
இருவர்
இமைகள் மட்டும் பேசும் !

கற்பின்கனல் கண்ணகியின்
பொற்சிலம்பு சிதறும்போது
மெய் அறிந்த பாண்டிய மன்னன்
மெய்யில் வாழும் உயிர்
பிரியும் தருணத்தில்
‘நானோ அரசன் நானே கள்வன்’
மனம் சிதறி
அவையில் வீழ்ந்தான் !

தசரத மன்னனின்
அம்புபட்டு
அன்பு மகன் சிரவணன்
உயிர் நீத்தான்
பார்வையற்ற தந்தை கேட்டு
உள்ளம் கொதித்து
‘உன் உயிர் பிரியும்போது
என்னைப்போல் துடிப்பாய்
புத்திர சோகத்தில்
தசரதனே வீழ்வாய் ’
உயிர் பிரியும் தருணத்தில்
சாபம் அளித்தான் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (2-Jul-18, 6:31 pm)
பார்வை : 152

மேலே