ராமு-சோமு உரையாடல் கடவுள் உருவம் பற்றிசிரிக்க, சிந்திக்க

சோமு : ஐயா............ ரொம்ப நாளா உங்கள ஒன்னு
கேக்கணும்னு யோசிச்சேன்.....கேக்கத்தான்
நா வரல ஐயா.........எஜமானர் உங்களிடம் இதை
கேக்க............(தலையை சொறிந்தவாறே.)

ராமு : டேய், டேய்............உனக்கு எத்தனைமுறை நான்
சொல்லி இருக்கேன்.......நீ என்ன எஜமானர் என்று
நெனைக்க கூடாது..... நம்ம வீட்டுல ஒருத்தனா
என் பிள்ளை போலதானடா உன்ன நான்
பாக்கறேன்.............சரி, என்ன தயக்கம் கேக்கறத
கேளு...........
சோமு : ஐயா நாம ஏன் கடவுளுக்கு நம்ம மாதிரியே
உருவம் வைத்து பூஜிக்கிறோம்...சிலையா,
படமா, சித்திரமா இப்படி....கடவுளை
யாராச்சும் நேரா பாத்து இப்படி முதல்ல
அறிமுகம் செஞ்சாங்களா......சிவன் நா இப்படி
விஷ்ணு நா இப்படி........என்றெல்லாம்......ஏதோ
இந்த சின்ன அறிவை தாக்கும் கேள்விங்க
கெட்டப்புட்டேன்.தவறுனா மன்னிச்சிடுங்க ஐயா..


ராமு : டேய், வழக்கம்போல அறிவு நிரம்பிய உன் கேள்வி
என்னை அசர வைக்கிறது...............இந்த சிலை.
சித்திரம் எல்லாம், கடவுளை நாம் மனசுக்குள்ள
காணும் வழிகளில் முதல் படி........ஒரு உருவம் வைத்து
ஆழ்ந்து மனதில் நிறுத்தி ஜபித்தால் கடவுள்
புலப்படலாம்.....சித்தம் தெளிந்தால் ....சிவன் தெளிவு
போல.....அல்லது, கடவுள் தன்னையே நினைத்து
மனிதனை உருவாகியிருக்கலாம்.........அதே உருவில்
மனிதன் கடவுளைக் காண்பதில் என்ன தவறு....
அல்லது தன்னைப்போல் உருவை மனிதன்
உருவாக்கி, அதை கடவுள் எனலாமா.............எதிலும்
உள்ளமின்றி இயக்குபவன் அவனே.....ஆகா உருவும்
அருவுமாய் இருப்பவன் அவனே...நீயாய்,நானாய்,
பறவையாய்,செடி,கோடியாய்,காயாய்..பழமாய்
நதியாய், கடலாய், மரமாய்.............இப்படி

ஆக கடவுளுக்கு உருவம் உருவம் இல்லாமை இரண்டும்
ஒன்றெனு எனக்கு தோன்றுதப்பா.......
சின்ன கேள்வி கேட்டுபுட்டா, எத்தனை ரகசியங்கள்
அதனுள்ளே

நினைத்தால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறதே

டேய் சோமு,, நீ சாமானியன் அல்ல ....பெரிய
அறிவாளின்னு நான் சொல்வேன்

சோமு : ஐயா நான் எப்போது சிறியவன் ஐயா
உங்க முன்ன............(சங்கோஜம்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-18, 10:05 am)
பார்வை : 104

மேலே