இலவசமா பொண்ணுத் தர்றாங்களாமே

ஏண்டப்பா கணபதி....
@@@@@
பாட்டி நீங்க எனக்கு வச்சபேரு கணபதி. அதை நான் காலத்துக்கு ஏத்த மாதிரி 'கண்பத்'-ன்னு மாத்திடது தெரிஞ்சும் என்ன 'கணபதி'ன்னு கூப்பிடறது சரில்ல.
@@@@
சரிடப்பா கண்ணுபத்து, அந்தத் தொலைக் காட்சிப் பொட்டில ஒரு வெளம்பரம். எனக்குத்தான் கண்ணு மங்கலத்தாத் தெரியறது உனக்கும் தெரியுமே.
@@@@
சரிங்க பாட்டிம்மா. அந்த வெளம்பரத்தில என்ன சொன்னாங்க.
@@@@@@
என்னமோ சந்தூராம். அத வாங்கினா ஒரு பொண்ணை இலவசமாத் தர்றாங்களாம். என்ன அநியாயம்டா. மகாபாரதக் கதையிலதான் ஒரு பொண்ணப் பரிசுப் பொருளாச் சொல்லி அஞ்சு ஆம்பளைங்க கல்யாணம் பண்ணீட்டாங்க. அந்தக் காலத்திலேயே பொண்ணுங்களக் கேவலப்படுத்திருக்காங்க. இப்ப என்னடான்னா பொண்ண
இலவசமாத் தர்றாங்களாம். என்ன உலகம்டா, கண்ணுப்பத்து
@@@@@
பாட்டிம்மா நானுந்தான் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். சந்தூர் ஒரு குளிக்கற சோப்புப் பேரு.
@@@@@
குளிக்கற சோப்பா? அந்த இலவசம்?
@@@@@
அதுவா பொண்ணு இல்ல. 'பென்'. அதாவது அந்த சோப்பை வாங்கினா இலவசமா ஒரு பேனாவைத் தர்றாங்களாம்.
@@@@
அட எழவே. எனக்கு இது தெரியாம போச்சே. எனக்கும் அந்தச் சோப்பை வாங்கிட்டு வாடா கண்ணுப்பத்து. பேனாவை நீயே வச்சுக்கடா கண்ணுப்பத்து.

எழுதியவர் : மலர் (6-Jul-18, 9:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 210

மேலே