ஏனடி கண்ணீர்
அழகே!
என் கிழக்கே!
உன் கண்ணுக்கு
இமை போல
நான் உந்தன்
துணையாக இருக்க
ஏனடி கண்ணீர் உனக்கு....?
அடியே!
என் பூஞ்சிரிப்பே!
நீ சிரிச்சாத்தா
நகரும் எம்பொழப்பு
இப்படி இருக்கையில்
ஏனடி கண்ணீர் உனக்கு.....?
அன்பே!
என் ஆசை மனமே!
தலைய நா அடமானம்
வச்சாச்சும் உன்
ஆசையெல்லாம்
செஞ்சி முடிப்பேன்னு
தெரியும் தானடி உனக்கு
பிறகு ஏனடி கண்ணீர் உனக்கு...?
அம்மு குட்டியே!
என் அன்புக் குட்டியே!
நீ அழுதா என் மனம்தா
தாங்குமா நீ கண்ணு
கசக்கினா எம்மனந்தா
நோகுமே
பிறகு ஏனடி கண்ணீர்
உனக்கு.....?
என்னை காண முடியாமல்
அழுகிறாயா? இல்லை
என்னை காண வேண்டும்
என்று அழுகிறாயா?
உன் அருகில் நான்
இல்லை என்று அழுகிறாயா?
இல்லை உன் அருகில் நான்
இருக்க வேண்டும்
என்று அழுகிறாயா?
என் உள்ளத்துக்கும்
உசுருக்கும் சொந்தக்காரியே!
ஏனடி கண்ணீர் உனக்கு?
நான் இருக்க நீ அழலாமா
நம் காதலுக்கு இது அழகாகுமா?
துன்பங்களை அடமானம்
வைத்து இன்பங்களை
திரும்பப் பெற முடியுமா?
எப்பொழுதும்
முப்பொழுதும்
உன்னோடு
நான் இருக்க
உன் கண்ணோடு சிறு
கண்ணீர்த்துளி
உன் கண்ணை
கடந்து தவறி விழவும்
விட மாட்டேனடி
நான் தவறும் நாள் வரை.....!!!