374 தன்னைத்தான் புகழில் இகழ்வே சாரும் – தற்புகழ் 7
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
சடமதைக் கழுவ வுன்னிச்
= சகதியிற் றோய்தல் போலும்
சுடரினைத் தூண்ட வேண்டி
= யூதியே தொலைத்தல் போலும்
மடமையால் தன்னைத் தானே
= புகழுவோன் வசைக ளெல்லாம்
புடவியே யெடுத்து ரைக்கப்
= பூணுவன் நிந்தை யம்மா. 7
– தற்புகழ்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உடலைக் கழுவிக் குளிக்க நினைத்து சேற்றில் மூழ்குவது போலவும், விளக்கைத் தூண்ட நினைத்து ஊதி அணைப்பது போலவும் அறியாமையால் ஒருவன் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வானானால் உலகோரால் அவனுடைய தீய குணங்களையெல்லாம் தேடி எடுத்துச் சொல்லப்பட்டு இகழ்ச்சி அடைவான்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
சடம் - உடல். சுடர் - விளக்கு. தொலைத்தல் - அணைத்தல். வசை - தீய குணங்கள். நிந்தை - இகழ்ச்சி.
பூணுவன் - அடைவான்.