நொட்டா நாற்பது

நொட்டா நாற்பது
-----------------------
புலவர் பலரும்வீ ரம்பிரிவுக் காதல்
கலையெனப் பாடியேப் போந்தார் -- புலவரில்
இன்னொருகம் பன்இளங்கோ வள்ளுவனும் இன்றைய
இன்னுலகம் மீள்வரோ சொல் (1)


நானும் கமுகுபலா மாக்கதலி கான்யாறு
மானுலவும் சோலைவாவி சாகரக் -- கானகமும்
தானுரைக்கேன் நன்னடத்தை தேவையிப்போ ஏனென்று
கோணிடாக் கேட்பீர் இதை (2)


நீட்வெறுத்த மாணவரும் நெட்டொதுக்கித் தள்ளியதும்
பாட்டெழுத வைத்ததென்னை முன்னவரும் --காட்டமாய்
வேண்டாமென் றார்நீட்யேன் கெஞ்சும் தலைகளால்
வேண்டாக் கொடுக்கும்மார்க் கால் (3)


நாற்பதாம் இன்னாக் களவழியும் நாற்பதாம்
நாற்பதாம்கார் சொன்னார் இனியவையும் --கற்க
அகம்புறத் தில்சொன்னார் நொட்டா வகையில்
மிகுஉண்மை சொன்னேன்நான் கேள் (4)


மாணவர் பத்தாம்வ குப்புவரைக் கண்டதில்லை
வேணாப் பெயிலும்பா டங்களும்தான் -- பேணா
பிடிக்கறியா ஆசிரியன் தந்த படிக்கா
தடித்தமார்க் கில்சத்தில் லை (5)


கல்லா அரசுத் தலைகளும் பொல்லாரே
கல்வி யொழித்தத் தலைகளாம் -- கல்விகொன்றான்
நாட்டையும் காட்டிக் கொடுத்திடும் மாடிவன்
நாட்டைவிட் டோட்டப்பார் நீ (6)


நீட்தரத்தை காட்டிவிளக் காமழுப்பி விட்டாரே
நீட்எதிர்ப்பை ஏன்அரசு ஆதரித்தார் -- கட்டாயம்
தேவையென்று சொல்லாது பாவம்மா ணாக்கறென்றார்
பூவைத்தே மாற்றுவேலை பார் (7)


வெள்ளையன் சென்றபோது கல்வித் தரமிங்கே
சொல்வேன் இரண்டாமி டம்சென்னை -- கள்ளமில்லை
உண்மையிது சொன்னேன் கெடுத்தார் சினிமாவால்
வன்மைமேடைப் பேச்சாலு மே (8)


நீட்பரிட்சை வேண்டாமாம் செட்டாய் எதிர்த்தரப்பு
நீட்டரசுக் கும்வேண்டா வாம்சொன்னார் -- வேட்டையாட
மாணவர் வேண்டும் எனவறிந்த வீணறிவர்
காணார் படிப்பறி வும் (9)


நீட்டில் அறுபதை ஆந்திரம் தட்டியதாம்
நீட்டில் அறுபதும்மேல் கேரளம் -- தட்டியது
நந்தமிழ் நாடோமுப் பத்துச்சொச் சந்தானே
நந்தமிழர் கல்லாரா னார் (10)


வெளிமா நிலத்தார்கல் விக்கோர் விளக்காம்
அளித்ததேன்நம் மாணவர்க்கு கல்வி -- விலக்கும்
தரமற்ற ஆசிரிய னாநல் உரம்சொல்
சிரத்தையி லாமாண வர்க்கு (11)


பள்ளித்த ரம்உயர்த பள்ளியில்வேண் டும்கற்றக்
கள்ளமில்நல் ஆசிரியர் நம்நாட்டில் -- இல்லையிது
மார்க்பத்தை முப்பதாக்கித் யார்க்கும் தருவர்பாஸ்
யார்க்குமுத வாசிரிய ரிங்கு (12)


அரசுப்பள் ளிக்கெடுத்தார் ஆசிரியர் நல்லத்
தரமான ஆசிரியர் சேர --வருவார்பார்
நல்முத்து மாணிக்கக் கல்நவரத் னம்போல
எல்லாம் அரசின்கை யில் (13)


முப்பதுமா காணத்தார் எப்போதும் மான்யகுழு
தப்பாமல் வைத்திடுவார் நெட்பரிட்சை -- எப்பவும்போல்
நந்தமிழ்நா டுத்திணறும் எந்தக்கேள் விக்கும்பார்
அந்தவிதம் ஆயினும்வி டார் (14)


நீட்விரும்பான் நெட்டுபிடித் தப்பள்ளி மாணவன்
நெட்விரும்பான் கல்லூரி ஆசிரியர் -- மட்டி
மலிவாம் அரசுகல்லூ ரிப்பள்ளிக் கல்வி
நலிந்தொடுங்கி னார்மாணாக் கர் (15)


நெட்பாஸா கிக்கிடப்பா ரையரசு விட்டுவிடும்
நெட்டிலாரை ஆசிரிய னாக்கிடுவர் -- பட்டாளம்
நெட்பாஸா னோர்வேலை தேடியேக் கெட்டாராம்
கெட்டகொள்ளை யர்அரசாம் கேள் (16)


நீட்டில்வைத் தான்தகுதி டெஸ்ட்மார்க் யெதற்கிந்தக்
கட்டாயம் மக்களுயிர் கைபிடிக்கும்--ஸ்டெத்திலாம்
வெட்டிமாண வர்படிப்பும் மட்டிமடை யர்கூடா
நீட்டிலிவ ரைவடித்தார் கேள் (17)


தமிழர் தலைகள் உமிப்பதர்க் கொப்பாம்
தமிழ்த்தலைகள் தேர்ந்தமாணாக் கர்கள் -- உமியே
தமிழ் நாட் டாசிரியர் தந்த உமிமதிப்பெண்
இம்மியுத வாத்தெரிந்தி டும் (18)


எச்சத் தமிழரினிப் பிச்சைப் புகார்பாரும்
கொச்சை படுத்தவே நீட்வைத்தார் --அச்சமிலா
எட்டித் தமிழ்மாணாக் கர்கேட்டால் நொட்டவேணும்
நீட்டிலா உச்சப் பணி (19)


நடுவரசு அல்ல யெடுபிடி நம்மில்
கெடுபிடி செய்யத்தான் தேர்ந்தோம் --நடுவண்
யெமனாக வேலைசெய்வர் பாரும் நமக்கும்
யெமனிவன் காப்பன் உயிர் (20)


விடாப்பிடியாய் செய்யத் தடாயேன் தமிழா
கடினத்தை செய்யக்கற் றுக்கொள்-- மடிந்துபோ
அன்றின் முடியுமுன்னால் இன்று அறுப்பனுன்
சங்கைநாளைத் தாங்குவ தார் (21)


கட்சிநம்மை பட்ஷிக்கும் வேடதாரி பெற்றோரே
தட்டிக்கேட் டுத்தள் ளவரையெட்டி -- கட்டுவார்
நம்மையேயே மாறாதீர் நம்முன்னேற் றம்கருதா
தம்முன்னேற் றம்விரும்பி கள் (22)


படிக்காமல் பாஸா எடுக்கவேண்டும் இப்போ
நெடியபயிற் சித்தரமா ணாக்கர்-- படிப்புயரும்
மாணவர்பக் கல்யெவனும் போனால்தண் டிக்கவேணும்
வேண்டாம்நீ லித்தனம் கேள் (23)


தீக்குளிக்க லட்சங்கள் தீப்பந்தக் கொள்ளையர்
தீக்குளிப்போ ருக்குத் தருவதும் -- நோக்கமுள்ளே
தக்கமார்க் வாங்காதான் தக்கலஞ்சம் தந்திடுவன்
ரொக்கமாய் எப்படிப்பிற் கும் (24)


கல்விக் கரையில கற்பவை நாள்சிலவாம்
நல்லபாட்டிச் சொன்னதால் என்னபயன் --கல்விப்
புறக்கணித்தார் மாணாக்க ரன்றி அரசும்
யிரந்துநீட்டை எற்கமறுத் தார் (25)


தொன்நூற்றொன் றில்நடுவண் மான்யக் குழுவைத்தார்
கண்டிப்பாய் கல்லூரி ஆசிரியர்-- வேண்டினவர்
பாடத்தில் ஐம்பத்தைந் தாம்மார்க்கும் தாழ்ந்தவர்க்கு
பாடத்தில் ஐம்பதென் றார் (26)


மார்க்கும் முதலட்டம்ப் டில்வேண்டும் யார்க்குமே
மார்கிலான் நெட்டெழுதான் சட்டமிது-- மார்க்கிருப்பின்
யாரும் எழுதலாம்நெட் அட்டம்ப்ட்மார்க் பாருதவா
நாறும்அட் டம்ப்ட்ஸ்லெட்டில் தான் (27)


நெட்டே முதல்நுழைவுத் தேர்வென்பர் சட்டமது
நெட்டில்பாஸ் செய்தவரே ஆசிரியர் -- கட்டாயம்
மற்றோரா காரா சிரியராக மாற்றவர்க்கு
கற்பிக்க பள்ளிமட்டு மாம் (28)


நெட்பாஸ் யெனில்தரனும் கட்டாயம் ஆசிரியர்
நெட்டில்லஞ் சம்கிடைக்கா நெட்விட்டு --- கட்டாக
நெஞ்சத் துணிவாய்நெட் விட்டவரி டம்லஞ்சம்
மிஞ்சிவாங்கிக் தீர்த்த அரசு (29)


இந்தநெட்யில் லாதான் தகுதியில்லா அந்தகனாம்
அந்தகனெவ் வாறுபாடம் போதிப்பர் --அந்தகர்க்கு
பொய்புனைச் சான்றுபல புத்தகப்பொய் கொய்தபட்டம்
பொய்முனைவர் செய்வார்பா ரும் (30)


நடுவண் நடத்தும்நெட் கல்விபாடத் தேர்வை
கடுமுழைப்பால் வெற்றிகண் டாரை-- விடும்வீணர்
தேர்ந்திடாரை மந்திரஜா லம்செய்து தேர்ந்திடுவன்
நேர்முகமாய்த் தள்ளியவ ரை (31)


திறமைமிகுந் தாரை மறந்தபின் கல்வி
நிறைவிலார்வைத் தாசிரியர் தேர்வா -- சிறக்கா
பதக்கம் பலவென்றா ரையும் ஒதுக்கின்
எதற்காகும் நாட்டின்கல் வி (32)


மான்யக்கு ழுக்கண்ணை மாண்புடையோர் மூடிடக்
காண்டார் பலகோடி பொய்சொல்லி --தூண்டினார்
இங்கேயும் பிஎச்டி மட்டுமுண்டு தங்கமாம்
இங்கிருந்த நெட்டொழித் தார் (33)


நெட்டில் நுழைந்தபின் தட்டாவு யர்வுக்கு
செட்டாய் அநுபவம் பத்தாண்டும் -- பட்டம்
முனைவர் புனைநூ லுடன்பிற வெல்லாம்
இணையபே ராசிரிய ராம் (34)


நெட்விட் டனுபவமார்க் கேட்டதேன் சொல்லாமார்க்
கட்டாய்நூல் செய்யக் கொடுத்ததுமேன் -- யெத்தராம்
கட்டடஸ்தி வாரத்தை சட்டம்மீ றிக்கெடுத்தார்
தட்டிகேட்கா மான்யக் குழு (35)


தட்டிக்கேட் டால்அவர்மான் யம்சேரா யெட்டிப்போம்
தட்டா வடிக்கடி மாற்றியே --பட்டங்கள்
போதும்பி எச்டியென்றாய் காதுவைத்து நெட்ஒழித்தாய்
போதுமேமா ணாக்கரழி தல் (36)


நீட்டெழுதா டாக்டராகல் லூரியில் நெட்டிலாரா
நீட்டினார்கை யைப்படிப்பில் கெட்டதார் -- கேட்டதார்
பொல்லா இரகசியம் யாரறிவார் -- கல்லாவை
யெல்லாத்த லைநிரப்ப லாம் (37)


கல்லூரி யாசிரியர் நெட்தகுதி இல்லாமல்
கல்லூரி யில்நுழையக் கூடாவாம் -- பொல்லா
அரசியல்த லைகள் புரட்சியாய்நெட் விட்டு
நரிகளைக்கல் லூரிநுழைத் தார் (38)


உயிர்காக்கும் மாணவர்க்கு யர்தகுதி வேண்டும்
பயிரில்த ரம்பார்க்கா வாங்கார் --தயவுபார்த்து
மார்க்வாங்கான் சாதல் புதியதா பாரும்நீர்
யார்க்குமிங்கு ஒப்பாரி யேன் (39)


மாணவரின் சக்திவேண்டி யாதரிப்பன் மாணவரை
மாணவரே பின்னவர் ஓடாதே -- காணாமல்
ஓடுவன்பார் சாடுமவ ரைநாட்டை கோழையாக்கி
பேடியாக்கி விட்டமூட ரை (40)


ஒப்பாரி வைப்பார் உறவினரே ஊளையிங்கேன்
தப்பா அனைத்துதரப் புக்கட்சி -- தப்பே
தமிழரை கற்காக் கெடுத்தத் தமிழின்
உமிப்பதராம் மக்களறி யார் (41)

யெவனோ எழுதிய ஆய்வை இவனேத்
தவமாய்த் தயாரித்தேன் யென்பான் --அவண்தான்
யிவர்க்கும்டாக் டர்பட்டம் ஈவர்பார் பாவம்
யெவண்படிக்காக் கட்சியறி யும் (42)


சைனாவில் பைனாகு லர்தேடல் தேர்விலே
மைனா ரிடிபார்க்கான் ஏழ்வருடம் --சைனா
ஜெயிலில்தள் ளும்கேள் பெயிலே சரியாம்
ஜெயில்பயம் ஏனிங்கில் லை

மாணவரை சோதிக்கக் குற்றமே காண்கிறான்
மாணவர்க்கு வக்காலத் தேன்சொல்லு --வேண்டாமே
தூண்டிடும் பச்சோந்தி காண்பாழ் படுத்துமிவர்
வீணர்நாட் டுக்குத வார்


குறிப்பு:
------------------
தமிழ் நாட்டின் பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி தரமான
கல்வி கற்றுத் தருவதில்லைஆனால் இவர் வாங்கும் மார்க்கோ தொண்னூருக்கும் மேலே அள்ளித் தருவர் ஆசிரியர். மாணவர்க்கு ஆசிரியர் நண்பனே தூண்டு கோலில்லை.மாணவர்க்கு ஆரம்ப பாடம் கூட கடினம் இப்போது. நல்ல தரமான வேலைக்கு தரமான நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும் கண்ட கண்ட தரமில்லா தவர்
பணம் தந்தால் மாநில அரசிடம் அந்த முக்கிய வேலை பெற்றுவிடலாம் எனபது நினைப்பாகும். அவரவர் ஆட்சிக்கு வரும்போது சாதகமாயிருக்கும் யென்று கட்சிகளும் ஆதரிக் கின்றார். IAS NEET NET எல்லாம் இப்படிதான்.

எழுதியவர் : பழனி ராஜன் (9-Jul-18, 7:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 234

மேலே