என் காதல் ஓவியம் நீ

என் காதல் ஓவியம் நீ

பெண்னே!

நீ வரைந்த காதல் கவிதை
எனை வந்து சேர்ந்தது..

என் மேல் கொண்ட காதலை
உன் ஆசை வரிகளால்
என் இதயத்திற்கு அழகாய் புரியவைத்துவிட்டாய்..

என் மனதை வென்றுவிட்டாய்!!

என் தனிமையை கொன்றுவிட்டாய்!!

மாய்ந்த என் காதலுக்கு
மறுஉயிர் தந்துவிட்டாய்!!

உன் அன்பான பேச்சால்
என் காயங்கள்
அனைத்தும் காணமல் போனது...

என் மனதில் காயத்தின் வடு மறைந்து
உன் காதலின்
சுவடுகள் பதிய ஆரம்பித்துவிட்டது...

என்னுள் கலங்க வா கண்னே!!!
என் கற்பனைக்கு
உயிர் கொடுக்க வா பெண்னே!!!

உன் முயற்சி வீண் போகவில்லை..
நானும் விழுந்துவிட்டேன் உன்னில்.. நிறைந்துவிட்டேன் உன் மூச்சில்..

காலம் நம்மை சேர்க்குமா..?!

நான் சேமித்து வைத்த
காதல் அனைத்தும் உன்னிடம் மட்டும்
செலவு செய்ய விரும்பியவனாக,

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (9-Jul-18, 9:25 pm)
பார்வை : 3346

மேலே