திறவாத கதவுகள்

இரவின் நிலவொளியில்
அவளின் நினைவலைகளுடன் நான்
வாழ்க்கைதனை தொடங்க
இதயந்தனை இழந்து
அவளின் காதலுக்காக
கண்ணயர்ந்துறங்காமல்
கற்பனைகளோடு இன்னும்!

நேர் வகிடெடுத்து
கற்றை கார்கூந்தல்தனை
ஜடைபின்னி காதோரம்
வெண்ரோஜாதனை
அவள்சூட - காதல் காயமது
என்னிதயத்தில்!

கம்பனின் நாயகியா இவள்
கண்களாலேயே
சுட்டெரிக்கிறாள்!என்னுள்
மலரத்துடிக்கும் காதல்
மொட்டது மலர - அவள்
பார்வை மழை வேண்டுமே!

கொடியிடையாளால் கொணர்ந்த என்னிதயம்
செயல்களற்று! அன்பே
உந்தன் மூச்சுக்காற்றினை
நான் சுவாசிக்க அணுமதி
கொடேன்!

வளர்பிறையாய்
வளர்ந்துவிட்ட என் காதல்
என்றும் முழுநிலவாய்
காட்சியளிக்க
கண்ணியவளிடம் கறைந்தேன்

என்னுள் மலர்ந்த இந்த
காதல் மலரினை அவளின்
காதோர கார் கூந்தலில்
சூடுவாளோ? மௌனித்தாள்

மலர் வாடியது!
பிரம்மனே ஏனவளுக்கு
திறவாத கதவுகளைக் கொண்ட
இதயந்தனை படைத்தாய்!

வாழ்க்கைதனை தொடங்க
இதயந்தனை இழந்து
அவளின் காதலுக்காக
கண்ணயர்ந்துறங்காமல்
இரவின் நிலவொளியில்
அவளின்
நினைவலைகளுடன் நான்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (11-Jul-18, 8:54 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 363

மேலே