நமக்கு முடிவேது என் தோழி

சத்தியம் செய்கின்றேன் தோழி...
உன் நம்பிக்கையை கொல்லமாட்டேன் தோழி...
எல்லாம் தோற்ற போதிலும்,
எல்லாரும் விட்டு பிரிந்த போதிலும்,
உன் மரணம் unnai தழுவும் வேளையிலும்,
உன்னை பிரிய மாட்டேன் தோழி, முழுதாய் என்னை நீ நம்பினால் உன்னை பிரியவே மாட்டேன் என் தோழி...

ஒவ்வொரு நொடியும் இறை சாட்சியாக,
அன்பாய் வாழ்வோம் என் தோழி...
போட்டியும் பொறாமையும் நமக்கெதுக்கு என் தோழி?
பொறுமையாய் வாழ்வை பகிர்வோம் என் தோழி....
அடுத்தவர் வாழ்வைக் கண்டு ஏக்கம் ஏன் என் தோழி?
உனக்காய் நானும் எனக்காய் நீயும் வாழ்ந்திடுவோமே என் தோழி...

விருப்பும்,வெறுப்பும் வேதனை தரலாம் என் தோழி...
ஆன்மாவினால் அன்பு கொண்டால் அதற்கு முடிவேது என் தோழி...
நமக்கு முடிவேது என் தோழி?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Jul-18, 3:34 pm)
பார்வை : 331

மேலே