கர்மவீரர்

விருதுப்பட்டியில் விழுந்த
விலையில்லா விதையே!!
அன்னை சிவகாமிமடியில்
மலர்ந்த மாணிக்கமே!!
தரணியை தழைக்கச்செய்ய
தமிழனாய் பிறந்த தங்கமே!!
உமது,
எண்ணமோ உயர்வு,
எளிமையான வாழ்வு,
கல்வியறிவோ குறைவு- ஆனாலும்
நீவிர் காலூன்றாத துறையோ குறைவு..
பண்ணை நிலமில்லை உமக்கு- ஆனாலும் உம் உழைப்பு தொழிலாளர்களுக்கு இன்றும் மறுபிறப்பு!!
தொழிற்பேட்டை அமைத்தாய்,
தொழிலாளர் நலங்கண்டாய்,
தொடக்கப்பள்ளி அமைத்தாய்- தோன்றினாய் புகழோடு ,
தோற்றுப்போனாய் தன்னலத்தில்!!
கூட்டினாய் பள்ளிவேலை நாட்களை-குறைத்தாய் தஞ்சை பண்ணையாள் சாகுபடி விழுக்காட்டை!! அன்னமிட்டாய் தாயாய்,
கருணைக்கொண்டாய்
காந்தியவாதியாய்,
கர்மவீரனாய்,
கண்ணியவானாய்,
செயல்வீரனாய், சத்தியமூர்த்தியின் தளபதியாய்,
உப்புச்சத்தியாகிரகத்தில் வீரனாய்,
நெப்போலியனின் மாணவனாய்,
நாட்டின் முதல்வனாய் வாழ்ந்தாய்!!
சுட்டெரிக்கும் சூரியனும்,சுழலும் பூமிப்பந்தும் உள்ளவரை உம் புகழ்பாட மறவாது கர்மவீரரே!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (15-Jul-18, 7:55 am)
பார்வை : 101

மேலே