முதர்வர் நாற்காலியின் எதிர்பார்ப்பு
மேதைகளையும் மாமனிதர்களையும் கர்மவீரரையும்
கருணையுள்ளம் கொண்டவர்களையும் சுமந்திருத்த நான் - இன்று
அடிமையாளர்களையும் ஊழல்வாதிகளையும் சுமப்பதால்
என் நெஞ்சம் குமுறுகிறது
என் நெஞ்சம் குமுறுவதை நிறுத்த - நான்
நான்கு கால்களில் ஒரு காலை உடைக்க நினைத்தாலும்
மனசாட்சியில்லாத மனிதர்கள்தான் கடமையை செய்யவில்லையென்றால்
மானமுள்ள நான் கடமையை செய்ய வேண்டுமென மனம் சொல்லுகிறது
எனக்கு பேசும் திறன் இருந்திருந்தால் என் மேல் அமரும் இவர்களை
எப்பொழுதோ ஏளனம் செய்திருப்பேன்
அதனால்தான் என்னவோ இறைவன் என்னை ஊமையாக்கிவிட்டான்
முற்காலத்தில் நான் செய்த பாவம் தான் இப்பொழுது இவர்களையெல்லாம் சுமக்கிறேன்
ஏற்கனவே நடிகர்கள் என்மேல் அமர்ந்து
நடத்திய நாடகம் போதாது என்பதாலோ
மீண்டும் நடிகர்கள் என்மேல் அமர ஆசைப்படுகிறார்கள்
நானோ நாட்டை காப்பவர்களை சுமக்க விரும்புகிறேன்
என்று தான் மீண்டும் ஒரு கருமவீரரையும்
பொதுநலவாதியையும் சுமக்கப்போகிறேனோ
அப்படியொரு தமிழ்த்தாயின் மகன் வரும்
நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்!!!