கண்ணனும் ராதையும் ஜெயதேவர் அஷ்டபதி படித்து நான் மகிழ தமிழில் இதை நான் தந்தேன் இப்போதே, இதோ

காத்திருந்தேன் யமுனைக்கரைக் கரையினில் அவன்
வருவானென்று பகலும் போய் அந்திசாய
என்னுளத்தில் பீதியும் சேர கண்மூடிக்கொள்ள
மந்திரகுழலோசை என் காதில் ஒலிக்க
புன்னைமலர் வாசம் என் நாசியைத்துளைக்க
என் கண்களை மூடினான் மாயன்
பெரிதே மகிழ்ந்து நான் கண் திறந்தேன்
அவன் காணவில்லை,குழலோசையும் கேட்கவில்லை
மலரின் வாசமும் போனதெங்கே மனம்வாடி
நான் அழுதிட, கண்ணெதிரே கண்ணன் வந்தான்
குழலோசையில் என் சித்தம் கலங்க என்னை
வாரி அணைத்து என் கொங்கையில் விறல் நகங்கள் பட
மோகம் தந்து காமம் தந்து முத்தம் பொழிந்து
முடிவில் தன் சிரிப்பால் காதல் மழையும்
பொழிந்தான் மலர்ந்தேன் மகிழ்ந்தேன் ராதை நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-18, 3:05 pm)
பார்வை : 132

மேலே