விவசாயி

விவசாயி...

இயற்கையின் உற்ற தோழன்...

விளைநிலத்தை முழுமையாய் நேசிக்க தெரிந்தவன்...

அனைவரின் பசியாற்றும் வள்ளலவன்...

உழைக்க மட்டுமே தெரிந்த உத்தமன்...

விதைகளை விளைய வைக்கும் வித்தை தெரிந்தவன்...

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பண்பாளன்...

கடன் வாங்கியேனும் கடமையை செய்பவன்...

நாட்டின் முதுகெலும்பாக திகழ்பவன்...

நன்றி எதிர்பாராமல் நன்மை செய்பவன்...

கண்ணீர் சிந்தினாலும் உழவை தொடர்பவன்...

எழுதியவர் : ஜான் (22-Jul-18, 7:42 am)
Tanglish : vivasaayi
பார்வை : 2533
மேலே