இயற்கையும் மனிதனும்

மழைக்கு தெரியாது
மனிதரின் ஜாதி,மத பேதம்
அவன் நிற பேதம்
பெய்கையிலே அது
எல்லாரையும் நனைக்கும்
இவர் மண், அவர் மண்
என்று இல்லாது எல்லார்
நிலத்தையும் நனைக்கும்
தாகம் தீர விவசாயி
மனதில் தேனூற

இளந்தென்றல் அறியாது
ஜாதி மத இன பேதங்கள்
அது அணைத்திடும்
காதலர்கள் அனைவரையும்
அவர்களிடையே நல்ல
தூதுவனும் தென்றலே

ஓடும் நதி அறியாது
மண்ணை மனிதன்
பிரித்துவிட்டான் துண்டு துண்டாக
மொழியால், சில பேதங்களால்
அது பாய்ந்து செல்லும்
எல்லை ஏதும் அறியாது
பிறப்பில் மாசிலா நதிகளையும்
மாசு படுத்துகிறான் மனிதன்
நதியைக்கூட சிறைப்படுத்துகிறானே

நிலவுக்கும் ஜாதி மதம்
இன பேதம் தெரியாது
அதன் தன்னொளி எல்லாருக்கும் சொந்தம்

பரிதி அறியுமா இந்த
ஜாதி மத இன பேதங்கள்
இல்லவே இல்லை -எல்லோரும்
நலமாய் வாழ்ந்திட மா மழையும் பெய்திட
மண்ணிற்கு ஜீவாதாரமாய்
காய்கிறான் சூரியன்

இயற்கையே இறைவன் என்றால்
இறைவன் தராத ஒன்றை
இறைவன் படைப்பு மனிதன்
படைத்தான் இந்த ஜாதியும் மதமும்
இன பேதமும் என்று நினைத்தால்
மற்றும் விலங்கினங்களில்
இந்த வேற்றுமைகள் ஏதும் இல்லையே
என்று நினைக்கும்போதும்
'மேலானவன்' என்று நினைக்கும்
மனிதனின் கீழ்மை
தெள்ளது தெளிவாகிறதே ...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-18, 4:52 pm)
பார்வை : 998

மேலே