நேரிசை ஆசிரியப்பா==வாழ்க எம்மாசான்
இலக்கணக் குழுமமொன்றில் தமிழில் இமயமாய் எழுந்து நிற்கும் ஆசான் ஒருவரின் பிறந்த நாளில் பிரியமான வாழ்த்துப் பா..!
வாழ்க எம்மாசான்
வளர்க தமிழ்த்தொண்டு.
===================
ஆழமான கருத்தில் அருந்தமிழ்ச் சொல்லில்
சூழலுக் கேற்பச் சுழற்றிய வார்த்தையில்..
ஆழிபோல மின்னுமாம் அவரின் வெண்பா.!
தோழியாய்க் கவியில் துணையாய் நிற்பார்.!
வீழாத தமிழையே வித்தெனக் கொண்டவர்.!
தாழாத் தமிழில் தந்திடும் அன்பர்.!
எழுதும் போதில் எடுத்துக் கொடுப்பார்.!
பழுதிலாத் தமிழைப் பிழையே வாராது.!
எவரெவர் எழுதினும் எத்தை எழுதினும்.!
அவரவர் பிழையை அன்பாகச் சுட்டுவார்.!
எத்தகை என்றிலை அத்துணை பேரையும்
வித்தகர் ஆக்கி வியப்பில் ஆழ்த்துவார்.!
வாழவும் தமிழில் வளரவும்..
தோழனாக வாரிசைத் தந்த மஹானே..!
=================
நேரிசை ஆசிரியப்பா
=================