தெரு யாசகன்
உன் விழியெனும் ஒளிப்பேழை
வீசிய வசீகரக் கதிர்கள் பட்டு
கசங்கிய துணி போல்
ஆனது என்னிதயம்,
நான் அதனை மினுக்கி
சுதாரித்து எழுந்தாலும்
நீ விட்டுச்சென்ற காந்தத் துகள்கள்
சட்டையின் ஏதோவோர் மூலையில்
அட்டை போல் ஒட்டிக்கொண்டு
திருக்கொண்டை மரக் கனியை
தின்ன மீண்டும் மீண்டும்
ஆசைப் படும் வானரம் போல
உன் பார்வை ஸ்பர்ஷத்துக்காய்
ஏங்கித் தவிக்கும் தெருயாசகனாய்
என்னை ஆக்கி விட்டனவே
அஷ்ரப் அலி