காதலின் பாடத்தை கற்றுக்கொடு

எனது கண்களில் மையோடு கரைந்துவிடு
உதட்டு சாயங்களுடன் ஒன்றாக ஒட்டிக்கொள்
மூச்சிக்காற்றுடன் முப்பொழுதும் கலந்துவிடு
உன் நினைவால் என்னை தினமும் வாழ வை
என் உயிருடன் உன் உயிரை சேர்த்து உறவாடிக்கொள்
எனது இதய துடிப்பில் உனது பெயரை ஒழிக்க செய்
இவையெல்லாம் காதல் என்றால் இந்த காதலின் பாடத்தை
ஓவ்வொரு நொடியும் எனக்கு கற்றுக்கொடுக்க
ஓடோடிவா காதலனே
மாணவியாய் மாறி மயக்கி கிடக்கிறேன்
ஆசானுக்கு அன்பளிப்பாய் என்னையே அர்பணிக்கிறேன்
நாம் காதலின் பாடத்தை கற்றுக்கொண்டே காலம் உள்ள வரையிலும்
வரலாற்றில் ஒருவராய் வாழ்ந்திருப்போம் என்னவனே!!!

எழுதியவர் : M Chermalatha (25-Jul-18, 3:34 pm)
பார்வை : 254

மேலே