பனி மூடிய பாதை
பாவை அவளின்
பார்வை என்னை மூடினால்
பனி மூடிய பாதை நான்
மோதினால் அலை மோதும்
கரை நான்
தேடினால்
சுகம் தேடும் சுமை நான்
உரசினால்
மலை உச்சி உரசிடும்
மழை மேகம் நான்
ஆனால்
என் உயிர் பாவை
அவளின் பார்வை
என்னை தீண்டாது போனால்
காற்றும் தீண்ட மறுக்கும்
தீண்ட தகாதவன்
நானாவேன்
தீராத நோவுற்று சாவேன்...!!!