நாம் வெற்றிபெற
துவண்டு போகாதே
துளிர்த்தெழ
பிறந்தவள் நீயன்றோ...
துக்கம் கொள்ளாதே
உன்னை தாங்கிகொள்ள பிறந்தவன் நானன்றோ...
உறுதியின் உற்ற
துணை நீதானே...
ஊக்கம்தர
உன்னோடிருப்பவன்
நான்தானே...
தொலைவும்
நம் காதலுக்கு
தூரமில்லை...
தோல்வியை
சந்திக்காதவர்
யாருமில்லை...
கருணை உள்ளம் கொண்டவளே
கலங்காதே...
கடவுளும்
காத்திருக்கிறார் நாம்
வாழ்வில் வெற்றிபெற!!!