நீ என்னவள்

இதயத்திற்கு "இன்னல் "
இதயத்திற்கு "இன்பம் "

இரண்டுமே எளிதாய் உன்னால்
மட்டுமே எனக்கு தரப்படுகிறது
அவ்வப்போது !

வெட்கம் கொண்டு இருவிழிகளால்
காதல் பார்வை பார்ப்பதும் !

கோபம்கொண்டு இரண்டு மணி நேரம்
பேசாமல் இருப்பதும் !

நீ இன்பமா ?
நீ இன்னலா !

இல்லை இல்லை

நீ என்னவள் !

எழுதியவர் : கவிஞர் முபா (29-Jul-18, 12:16 pm)
Tanglish : nee ennaval
பார்வை : 507

மேலே