வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி

வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி

சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான் கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்

தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்

நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்

மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்

கடல் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின்
கைகளில் இருப்பது துப்பாக்கியா ?பூச்சென்டா

பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் இந்தியா
பக்கத்துஇலங்கையிடம் வீரம் காட்டாதது ஏன்?

தமிழருக்காக என்றாவது இந்திய ராணுவம்
தட்டிக் கேட்டதுண்டா ?இலங்கை ராணுவத்தை

ஏன்?என்று கேட்க நாதி இல்லை
இந்தியனாகத் தெரியவில்லை தமிழன்

தமிழனின் உயிரை மதிக்காத இந்தியாவை
தமிழன் மதிக்க மனம் வருமா ?

விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களைவிட
விவேகமானது தமிழ் மக்களின் உயிர் காப்பது

எழுதியவர் : இரா .இரவி (17-Aug-11, 8:02 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 381

மேலே