இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு
இன்று இந்நாட்டில் இப்படி
கட்டுக் கடங்காமல் காம
வேட்டையாடும் மிருக மனிதர்கள்
...............தினம் தினம்
செய்தி தாள்களில் வரும் செய்தி
இப்போதெல்லாம் முதல் பக்கத்திலேயே,......செய்திகள், இப்படி..
'பாலியல் பலாத்காரத்தில் இந்தியா முதலிடம்
'இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும்
சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு''
'தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம்'
'இங்கு பெண்களுக்கு போதிய தற்காப்பு இல்லை'
வெட்கம் தலைகுனிவு, தலைதூக்க முடியலையே...
வேதனை, வேதனை...................
எப்படி சொல்வது............. 11 வயது சிறுமி கற்பழிப்பு
17 வெறிநாய்களொப்ப மனிதத்தோல் அணிந்து
நடமாடிய மிருகங்களின் மிருகச்செயல்...
இன்னும் இப்படி தினம் தினம் செய்தி வந்தமையும்
சட்டமும், போலீசும் ......................????????????????
இந்நாடு, பெண்களை தெய்வமாய் போற்றும் நாடு
பெண்ணை சக்தியாய் வழிபாடும் நாடு
கற்பரசி கண்ணகிக்கு கோயில் கட்டி இன்றும்
வழிபடும் நாடு ..............
ஆனால் இதே நாட்டில்தான் இன்று
பெண் சிசுவிற்கு கள்ளிப்பால் தந்து
பிறந்தவுடன் மரணம்................
பெண்ணின் மீது உண்மையிலேயே
மதிப்பு வைத்திருந்தால்...நாளுக்கு நாள்
பெருகிவரும் வரதக்ஷனை கொடுமை, தற்கொலை...
நாமெல்லாம் 'கபடதாரிகளா'............
இந்த பாலியல் வெறியர்கள் வெறிநாய்க்கினும்
கேடுகெட்டவர்கள் ...........
விலங்குக்கு காம வேட்கையில் கட்டுப்பாடு உண்டு
வருடத்தில் சில மாதங்களே ...................
வருடம் முழுவதும் வெறிகொண்டு அலையும்
இந்த 'பாலியல் கயவர்கள்'..............இவர்களுக்கு
எது சரியான தண்டனை, யார் கொடுப்பார்.....
எப்படி இந்த காம கொள்ளையரை அடித்து
நொறுக்கி அடியோடு ஒழிப்பது.......
என் நெஞ்சு துடிக்குதே ...............